உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 10 3

"பலவிதமா வாழ்க்கையிலே அடிபட்டு அடிபட்டுச் ಹಹಹಿ எது சங்கடம் எதுன்னு பிரிச்சுப் புரிஞ்சுக்கறதே எனக்குச் சிரமமாப் போச்சுப்பா...' -

'நீ ஒரு சமுதாய ஞானி...அனுபவ ரீதியில் பழுத்த யதார்த்த ரிஷி..அதான் இப்பிடி உன்னாலே பேச முடியுது. -அதற்குச் சின்னி பதில் சொல்லவில்லை. ஆட்டோ ஓசை யில் தொடர்ந்து உரையாடுவது இயலாத காரியமாயிருந் தது. கால்மணி நேரம் ஆட்டோ பயணம் தொடர்ந்தது. ஸ்டுடியோ கேட்டிலேயே தான் பார்க்கவேண்டிய ஆளைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டு ஆட்டோ வுக்குக் கணக்குத் தீர்த்துத் திருப்பி அனுப்பிவிட்டான்

"ஒம்பதாம் நெம்பர் ஃப்ளோருக்குப் போகணும். அதுக்கு முன்னாடியே மேக்கப் அனெக்ஸ் ஒண்ணு இருக்கும், அந்தப் பொம்பிளை அங்கேதான் இருக்காம்.' -

"எந்தப் பொம்பிளை சின்னி' -

"அதான்ப்பா கவர்ச்சி நடிகை குமாரி ஜெகஜ் ஜோதின்னு பேப்பர்ஸ் எல்லாம் பெரிசு பெரிசாப் படம் வருதே...?' -

"ஆமாம்.....அது யாரு...' "முதல்லே...நம்ப கொலைகாரன்பேட்டை வீட்லதான் > இருந்திச்சி. அப்ப இந்தப் புரொட்யூசர் அங்கே வரப்போக இருந்தான். அப்பா அவன் கூடவே இட்டுக்கிட்டுப் போயி ஸ்டாராக்கிட்டான்...நம்ப மேலே விஸ்வாசம் உண்டு... ஒரு வார்த்தை சொன்னாக் கேக்கும். .

'மத்தவங்களுக்கு விசுவாசம் இருக்கோ இல்லையோ..

எல்லாருக்கும் அது இருக்கும்-இருக்கணும்னு உனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு..."

அப்படியில்லேப்பா சின்ன வயசிலே கஷ்டப்பட்டு' மேலே வந்தனுக்கெல்லாம் அது இருக்கும்; இருக்கணும்.'