உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நிசப்த சங்கீதம்

ஒன்பதாம் நம்பர் ஃப்ளோர் வாசலில் அனெக்ஸ்-க்கு, வெளியே வேப்ப மரத்தடியில் ஒரு பிரம்பு நாற்காலியில் காபரே நடனத்துக்குரிய ஜிகினாப்போல மினுமினுக்கும். கவர்ச்சி உடையுடன். உடலழகு விட்டுத் தெரியும் இளநடிகை ஒருத்தி மேக்கப்போடு அமர்ந்திருந்தாள்.

சின்னியைப் பார்த்ததும் அவள், வாங்கண்ணே! ஏது இப்படி...இந்தப் பக்கம் அபூர்வமா...?' என்று. புன்னகையோடு எழுந்து அவனை வரவேற்றாள். - - . "'உங்களவரு ஊர்ல இருக்காராம்மா? இவருக்கு ஏதாச்சும் ஒரு வேலை கேக்கணும் அவரிட்ட...நீ ஒரு. வார்த்தை சொன்னின்னா நிச்சயம் நடக்கும் தங்கச்சி!'

"கட்டாயம் சொல்றேன் ... அண்ணனுக்கு இல்லா ததா?' என்று கூறியபடி முத்துராமலிங்கத்தின் பக்கமாகப்

புன்னகையோடு திரும்பிக் கும்பிட்டாள் அவள்.

'இது நம்ம ஜெகஜோதி...இவரு முத்துராமலிங்கம். எம். ஏ. படிச்சிருக்காரு..கதை-பாட்டு-வசனம் எழுதற. துலே எல்லாம் தெறமை உண்டு: என்று சின்னியே துணிந்து ஜோடித்து அறிமுகத்தைச் செய்து வைத்தான்.

"அது உள்ளே.ஷஅட்டிங்கிலே இருக்குது இப்ப இங்கே வரும்.நான் சொல்வி வழி பண்ணிடறேன்.'

'நான் இருக்கணுமா......: . ஏன் வேற எங்கேயாச்சும் போவனுமா?" எங்கேயும் போக வேணாம்? நானும் இருக்கணுமா? வேண்டாமான்னுதான் கேட்டேன்." x : - "இருங்கண்ணே....காபி கொண்டாரச் சொல் ல்ட்டுமா?" r

சின்னியின் பதிலை எதிர்பாராமலே ஒரு பையனைக் கைதட்டி அழைத்துக் காபிக்குச் சொன்னாள் அவள். அப்போதிருந்த காபரே நடனக்காரிக்கான ஒப்பனையில் அவள் ஒரு வனதேவதை போல அழகாயிருந்தான்.