பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 10ሃ

பின்னென்ன எக்ஸ்ட்ரா லப்ளையர் கிட்டப் பேசறப்ப ஒரு கூடை கத்திரிக்காயா வேணும்னு கேப்பாங்க...' - . w

இதுதான் நல்ல சமயமென்று சின்னி வந்த காரியத்தை r ஆரம்பித்தான், - - -

15

- அவரிடம் தான் வந்த காரியத்தைப் பக்குவமாக எடுத்துச் சொல்கிற சாமர்த்தியம் சின்னிக்கு இருந்தது.

"இந்தத் தம்பி பேரு முத்துராமலிங்கம்! தமிழிலே கதை, பாட்டு எல்லாம் நல்லா எழுத வரும். நம்ப கையிலே ஒரு வேலை போட்டுக் குடுத்தா உபகாரமா இருக்கும்...'

"ஆமாங்க! சின்னி அண்ணனுக்குக் கட்டாயம் நாம உதவி செய்யனும்.அவருதான் நம்பளை இப்பிடி ஒண்ணு. சேர்த்து வச்ச தெய்வம்...' .

-ஒரு மூன்றாந்தரப் படத்தின் நாலாந்தர டயலாக்' போலச் செயற்கையாயிருந்தன அவளுடைய சிபாரிசு வார்த்தைகள். ஆனால் அவற்றுக்கு உரிய செல்வாக்கு இருப்பது உடனே தெரிந்தது. -

'அண்ணன் என்கிற வார்த்தைக்கு அடுத்தபடி "தெய்வம்' என்னும் வார்த்தைக்கும் இப்போது 'டெப்ர. சியேஷன் வேல்யூ மட்டுமே கிடைத்திருப்பது போல் பட்டது முத்துராமலிங்கத்துக்கு . . . . . .

"சரி! நம்ப ஜோதியே சொல்லிடிச்சு...நீ நாளை யிலேருந்து இங்கே ஃப்ளோருக்கே நேரா வந்துடு...முதல்லே மாசம் முந்நூறுக்குக் குறையாம ஏதாச்சும் போட்டுத் - தரேன்...அப்பாலே பார்க்கலாம்."

இப்படி அவர் கூறியதைக் கேட்டு முத்துராமலிங்கம் வியந்து நிற்கையில் சின்னி அவ்ருக்கு நன்றி சொல்ல ஆரம்: பித் தான். -