பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . - 9

நன்றாகச் சிந்திக்க வேண்டிய வளரும் பருவத்தில்

.அலைன்மெண்டுகளையும், டெஸ்டுகளையும் எழுதிக் கொண்டு வகுப்பறைக்குள் அடங்கிக் கிடந்து தவிப்பதை அவன் வெறுத்தான். இன்டேர்னல் அசெஸ்மெண்ட்

மார்க்குகளுக்காகப் பேராசிரியர்களின் அசட்டு ஜோக்கு களுக்கும் விளக்கெண்ணெய் ஹாஸ்யங்களுக்கும் அவர்கள் பார்வையில் படுகிற விதத்தில் சிரித்துக் கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு மேலும் ஆட்பட விரும்ப வில்லை அவன். படிப்பும் வகுப்பறைகளும் அவனுக்கு அலுப்பூட்டின; சலிப்பு அடையச் செய்தன. -

சமீபத்தில் நடந்த அசெம்பிளி தேர்தலில் எம். எல். ஏ. ஆக வெற்றி பெற்ற சிதம்பரநாதனின் மகளும் தன்னுடன் படித்த கல்லூரித் தோழியுமான மங்கையர்க்கரசியைப் பார்க்கப் போனான் அவன். அப்போதே சிதம்பரநாதன் மந்திரியாக வரலாமென்று பேச்சு அடிபட்டுக் கொண்டிருந் தது. பண வசதியும் செல்வாக்கும் இருந்ததாலும்-ஒவ்வொரு ஜாதிக்கு ஒரு மந்திரி பதவி தந்தாக வேண்டிய அவசியமும் நிர்ப்பந்தமும் ஜாதி பேதமற்ற சோஷலிஸ் சமுதாயத்தை அமைக்க முயலும் . ஒவ்வோர் இந்திய அரசியல் கட்சிக்கும் இருந்ததனாலும் அவர் மந்திரியாக வருவது நிச்சயம் என்று பேசிக் கொள்ளப்பட்டது. அது எப்படி இருந்தாலும் அவருடைய மகள் அவனுடைய கிளாஸ்மேட்; சிநேகிதி. -

சிதம்பரநாதனின் பங்களா சொக்கிகுளத்தில் இருந் தது. அவருடைய வீட்டில் காம்பவுண்டுப் புல்தரை, மரத்தடி, வராந்தா, வரவேற்பறை எல்லாவற்றிலும் ஆட்கள் நிறைந்து பிதுங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே மாலை ரோஜாப்பூக்களின் இதழ்கள் சிந்தி

மிதிப்பட்டுக் கொண்டிருந்தன.

பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே அவனும், வேறு நண்பர்களும் அந்த பங்களாவுக்குப் பல, நாள் போயிருப்ப தால்-கூர்க்கா-அவனை அடையாளம் புரிந்துகொண்டு