பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நிசப்த சங்கீதம்

"எப்பவுமே நம்ப ஐயா கை ரொம்ப ராசியானதுங்க... முதல் வேலை இங்கே கெடைச் சாலே வேகமா முன்னுக்கு வந்துடலாங்க... தங்கச்சியையே எடுத்துக்குங்க...ஐயா கையிலே இட்டாந்து விட்டப்பெறவுதான் இப்பிடி ஜொலிக்குது!" - -

இப்படிசி சின்னி புகழ்வதை அவரும் விரும்பி ஏற்று மகிழ்ந்து இரசிப்பது நன்றாகப் புரிந்தது. பட்டனம் என்ற அந்தக் கலாசார மயானத்தில் புகழ் பலரை முட்டாள் களாகவும், மன நோயாளிகளாகவும், அடிமைகளாகவும் ஆக்கி வைத்திருப்பது புரிந்தது. புகழ் பொருள் காரணமாக அயோக்கியர்களும், அக்கிரமக்காரர்களும் நிமிர்ந்து நடந்து ஜொலித்துக் கொண்டிருந்தார்கள். புகழும் பொருளும் இல்லாத காரணத்தால் யோக்கியர்களும் நியாயவான்களும் கூனிக்குறுகித் தவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த முரண் பாடு வெளிப்படையாகவே அங்கு தெரிந்தது. -

கவர்ச்சி நடிகை ஜெகஜோதிக்கும் அவளுக்கு வேண்டிய அந்தப் பிரபல படத் தயாரிப்பாளருக்கும் நன்றி சொல்லி விட்டு அவர்களிடம் விடைபெற்றுக் கொள்ளுமாறு முத்து ராமலிங்கத்துக்கும் ஜாடை காட்டினான் சின்னி. -

சற்றே சிக்கனமான புன்னகையோடு கூடிய ஒரு வணக்கத்தை அவர்களுக்குச் செலுத்தி விடைபெற்றான். முத்துராமலிங்கம். புறப்படுமுன் சின்னியிடம் அவர் கூறினார்: - -

'செட்ல பாபுராஜ் இருக்கான். உன்ஆளை அவங்கிட்ட இண்ட்ரொட்யூஸ் பண்ணி வுட்டுடு - . . . . . . .

சரிங்க..." சின்னி முத்துராமலிங்கத்தை அழைத்துக்கொண்டு செட்'டுக்குள் நுழைந்தான். முத்துராமலிங்கம் சின்னி யோடு உடன் நடந்துகொண்டே, "அது யாரு பாபுராஜ்'. என்று சின்னியைக் கேட்டான். - -