112 - நிசப்த சங்கீதம்
முத்துராமலிங்கத்தின் இந்தக் கிண்டலைப் புரிந்து கொள்ள முடியாமல் வேறு யாரோ அவசரமாக வந்து டைரக்டர் கூப்பிடுவதாகக் கூறிப் பாபுராஜைக் கூட்டிக் கொண்டு போய்விட்டதால் ஒரு சிறு ஆரம்ப விரோதம் தவிர்க்கப்பட்டது. - -
"ரொம்ப முரண்டும், பிடிவாதமும் பண்ணி எடுத்த எடுப்பிலேயே விரோதம் சம்பாதிக்க வேணாம் தம்பி!' என்று சின்னி மெல்ல எச்சரித்து வைத்தான். -
வாய் நிறைய வெற்றிலை போட்டுக்கொண்டு அந்தச் செக்கச்செவேரென்ற வெற்றிலைச் சாற்றையே இரண்டு கடைவாயும் நிறைய வழிய விட்டபடி, "ஐயோ! பாவியைப் பாருங்கய்யா. ரத்தங் கக்கிச் சாகறதுக்குள்ளே ரெண்டு காசு தர்மம் பண்ணுங்கய்யா'-என்று குறக் குளித் தனம் பண்ணிக் காசு கேட்கும் ஒரு கல்லடி மங்கனைப் போல அந்த உலகம், கற்பழிப்பு, வறுமை, கன்ஃபைட், ஸ்டண்ட் என்று ஏதேதோ பண்ணிக் காசு சேர்த்துக் கொண்டிருப்பதுபோல் புரிந்தது.
"யோவ் சின்னி இன்னிக்கி நேரம் நல்லால்லேப்பா. என்னான்னுப்பா இந்த ஆளை இட்டாந்தே. சரியான ராகுகாலமாப் பார்த்தியா?...புதன்கிழமை வரச்சொல்லு. அன்னிக்கி நல்ல நாளு' என்று பாபுராஜ் வந்து சொன்னான். - . . . .” - சின்னியும் அதற்கு ஒப்புக்கொண்டான். - 'இந்த ரேப்ஸினுக்கு நாளு, நட்சத்திரம், நேரம்லாம் சரிபார்த்துப் பண்ணியே இன்னும் நல்லாப் புடிபடாமத் தவிக்கிறோம்'- . - 'ரேப்ஸினுக்கு நாள் நட்சத்திரமா?" "ஆமான்ன்ேன் வடபழநிக் கோயிலாண்டே நம்ப முதலியாருக்கு ஆஸ்தான ஜோசியர் ஒருத்தரு இருக்காரு. அவருதான் குறிச்சுக் குடுத்தாரு". r -