பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி JI I 5

பெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்’ என்று முழங்கிக் கொண்டிருந்தார் சிவகாமிநாதன். முத்துராமலிங்கம் சின்னியை வினவினான் : , ,

"யாருக்கும் பயப்படமாட்டாரு போல்ருக்கே..." "யாரிட்ட இருந்தும் எதையும் எதிர்பார்க்காதவரு எதுக்காவப் பயப்படனும்? பேட்டைக்குப் பேட்டை அவருக்குன்னு ஒரு தொண்டர் பட்டாளம் உண்டு. குடும்பம்னு பெரிசா ஒண்ணுமில்லே... சம்சாரம் கொஞ்ச நாளைக்கு முன்னாடித்தான் தவறிப் போச்சு...ஒரு பையன், கல்யாணங்கட்டற வயசிலே ஒரு வயசுப் பொண்ணு...ரெண்டு பேரும் இங்கே கூட்டத்துக்கே வந்திருப்பாங்க..." 'r

"எங்கே இருக்காரு?...என்ன பண்றாரு?" "சிந்தாதிரிப்பேட்டையிலே. சாமிநாயக்கன் தெருன்னு இருக்குது...அங்கதான் ஆடு...பேருக்கு ஒரு சின்ன அச்சாபீஸ் ஆட்லியே நடக்குது...அச்சாபீஸ்லே வெளி ஆளுங்க யாரு மில்லே...அவுரு பொண்ணு, பிள்ளை எல்லாருமே பார்த்துக் கிறாங்க. அச்சாபீஸ் வேலைகள்ளாம் இவங்களுக்கே நல்லா அத்துங்படி.'

'ரொம்ப அதிசயமான குடும்பம்...'

இன்னொண்னு சொல்ல மறந்திடிச்சே."தியாகியின் குரல்"னோ என்னம்ோ ஒரு வாராந்திரப் பத்திரிகையும் அந்த அச்சாபீஸ்ல இருந்து போடறாங்க...' -

கூட்டம் முறையாகத் தொடங்கியது. தலைவர் பேச்சாளர் எல்லாமே சிவகாமிநாதன்தான். எல்லாக் கூட்டங்களிலும் தொடக்கத்தில் பாடுவதுபோல் கடவுள் வாழ்த்தோ பாடாமல், * . . . . ; . .

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தன்ை செய்வோம்வீனில்உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம்-வெறும் , வினருக்கு உழைத்துடலம் ஒயமாட்டோம்'