உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நிசப்த சங்கீதம்

என்று கம்பீரமான குரலில் பாடிவிட்டுப் பிரசங்கத்தைத் தொடங்கினார் சிவகாமிநாதன். இப்படி மேடைச் சொற். பொழிவுகளுக்கென்றே வாய்த்தாற் போல் கணிரென்று பிசிறு தட்டாத வெண்கலக் கடையில் யானை புகுந்ததை ஒத்த குரல் அவருக்கு வாய்த்திருந்தது. -

'தனித்தனியே திரள் திரளாகவும், கொத்துக் கொத். தாகவும் நின்றிருந்த மக்கள் மேடைக்கு முன் வந்து தரை. யில் உட்காரத் தொடங்கினார்கள். தரையில் உட்காரக் கூசியவர்கள் ஒரங்களில் நின்றே கேட்கத் தொடங். கினார்கள். மந்திரம் போட்டு வரவழைத்த மாதிரிச் சிவகாமிநாதன் பேச ஆரம்பித்த சிறிது நேரத்தில் பெருங் கூட்டம் கூடிவிட்டது. சின்னி முத்துராமலிங்கத்தைக் கோயிலுக்குப் போக அழைத்தான். * . . . -

"வாப்பா உள்றப் போயி சாமி கும்பிட்டுட்டு வந்தப் பெறவு கேக்கலாம்." .

பெருமக்களே! அந்தக் காலத்திலே என்னைப் போன்ற தேசபக்தர்கள் வீடு வாசலை விற்றுத் தேச சுதந்திரத்துக்காகப் போராடினோம்! இன்றோ தேசத் தையே விலைக்கு வித்து அந்தப் பணத்திலே சொந்த் உபயோகத்துக்கு வீடு வாசல் கார் எல்லாம் வாங்கிக் கிறாங்க. விட்டை விற்று நாட்டைக் காப்பாற்றின தலை முறைக்கும் நாட்டையே விற்று வீடு வாங்கிச் சம்பாதிக்கிற

தலைமுறைக்கும் எத்தனை வித்தியாசம் பாருங்க...'

சின்னியும் முத்துராமலிங்கமும் வடபழநி கோயிலுக்குள் துழையும்போது ஒலிபெருக்கியில் சிவகாமிநாதனின் குரல்: இப்படி முழங்கிக் கொண்டிருந்தது. . . . . . .

கோவிலின் உள்ளே ச ந்நிதிக்கு மிக அருகே மந்திரியின்

மகளான மிஸ். மங்காவும், அவள் அன்னையும் தரிசனத்துக் காக நின்றிருப்பதைக் கவனித்தான் முத்துராமலிங்கம். ஆல் வேளைவாக அவள் இவனைப் பர்க்கவில்லை) சின்னிதான் பார்த்துவிட்டுச் சொன்னான்.