உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . i 17

"அன்னிக்கி நம்ம கொலை காரன் பேட்டை ஆட்டாண்டே கார்லே வந்து உன்னைப் பார்த்திச்சே, அந்தப் பொண்ணு நிக்கிது..." - -

'அதுக்கென்ன? நிக்கட்டும்.: "" அவங்க யாரு தம்பி போலிஸ் - பாரா-கோவில் எக்ஸிக்யூடிவ் ஆபீஸரு-எல்லாம்ாச் சுத்தி ஒரே தட புடல் பட்டுக்கிட்டிருக்கே? யாரோ மி னி ஸ் ட ரோ ட பொண்ணுன்னு ஜனங்க பேசிக்குதே...?'

"சாமி கும்பிட வந்த இடத்திலே...அதுலே மனசைப் போகவிடாமே மத்தவங்களைப் பத்தி என்ன பேச்சு வேண்டிக் கெடக்கு ?" . . - தற்காலிகமாகச் சின்னியின் வாயை அடக்க இது போது மானதாயிருந்தது.

அரை மணி நேரம் வடபழநிக் கோயிலுக்குள் செ - - வழித்துவிட்டு வெளியே தெருவுக்கு வந்தபோது ப்ொதுக் கூட்டத்தில் விறுவிறுப்பு அதிகமாயிருந்தது. கூட்டமும் அதிகரித்தது. தியாகி சிவகாமிநாதன் உச்ச ஸ்தாயியில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார். . . . . . . .

மிஸ். மங்காவின் தந்தையான அந்த மந்திரியின் சந்தர்ப்ப வாதங்களையும், லஞ்ச ஊழல்களையும் அவர் பன்னிரண்டு லட்ச ரூபாய்க்குச் சென்னை அடையாற்றில் அரண்மனைபோல் ஒரு வீட்டைப் புதிதாச விலைக்கு வாங்கியிருப்பதையும் சொல்லி விளாசிக் கொண்டிருந்தார்.

- அப்போதுதான் கோவிலுக்குள்ளிருந்து வெளியே வந்து - மூகப்பிலேயே போலீஸ் காவலோடு நின்ற காரில் ஏறப் போன மங்கையர்க்கரசியின் காதிலும் அவள் தாயின் காதிலும் இது விழுந்திருக்க வேண்டும்.

அப்போது முத்துராமலிங்கம் தானும், சின்னியும் நின்ற இடத்திலிருந்தே இதைக் கவனித்தான். கட்ட்க்