உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 18. நிசப்த சங்கீதம்

சாலை கொள்ளாமல் முழு அளவிலும் அதற்கு மேலும் கூடி விட்டதால் கார் எப்படியும் அங்கிருந்து வெளியேறிப் பிரதான சாலையாகிய கோடம்பாக்கம் ஹைரோடுக்குப் போக முடியாதபடி ஆகியிருந்தது. -

ப்ோலீஸை விட்டுக் கூட்டத்தை விலக்கிக் கார் போக வழி செய்யலாம் என்றால் எந்த மந்திரியின் லஞ்ச ஊழல் களைப் பற்றிக் கூட்டத்தில் காரசாரமாகப் பேச்சு நடந்து கொண்டிருக்கிறதோ அந்த மந்திரியின் காரே கூட்டத்தை வகிர்ந்து கொண்டு போவதால் ஏற்படும் விளைவுகள் என்னவாயிருக்கும் என்றும் புரியவில்லை. அந்தச் சமயத்தில் சிவகாமிநாதனின் மகனும், மகளும் கூட்டச் செலவுகளுக் காக உண்டியல் ஏந்தி வந்தனர். தெரிந்தோ தெரியாமலோ மந்திரியின் காரருகே நின்றிருந்த மிஸ். மங்காவிடம் போய் உண்டியலை நீட்டினாள் சிவகாமிநாதனின் மகள். அருகே நின்ற போலீஸ் அவளைத் துரத்த முயல்வதையும், மங்காபோலிஸைக் கையமர்த்தித் தடுத்துவிட்டு ஒரு முழு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து உண்டியலில் போடுவதையும் முத்துராமலிங்கம் கண்டான். மங்காவின் தாய் அவளைக் கடிந்து கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்வதையும் கூட அவனால் காணமுடிந்தது. • ,

நாட்டிற்காகப் பாடுபட்டுச் சிறைசென்ற தியாகி சிவகாமிநாதனின் மகள் காசுக்காக உண்டியல் ஏந்தி நிற்பதையும், நாட்டு விடுதலைக்கு எதிராக இருந்த பாரம் பரியத்தில் வந்த ஒரு சந்தர்ப்பவாதியின் மகள் ஐந்து ரூபாய் நோட்டை அலட்சியமாக எடுத்துத் தருகிற நிலை யில் இருப்பதையும் மனத்துக்குள் ஒப்பிட்டுப் பார்த்தான் முத்துராமலிங்கம். சின்னி சிரித்தபடியே கூறினான் :

படா கில்லாடிப் பொண்ணுப்பா அப்பாக்காரரு எந்த மந்திரியைத் திட்டிப் பேசிக்கிட்டிருக்காரோ அந்த மந்திரி மகளுட்டவே அஞ்சு ரூபா கறந்திடிச்சே!'

குடுக்கட்டுமே எல்லாம் இவுங்க மாதிரித் தியாகிங்க வவுத்திலே அடிச்சுப் பறிச்ச காசுதானே:'