பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏盛获 - நிசப்த சங்கீதம்

அங்கே கூடியிருந்த மக்கள் அவருடைய அந்தக் கட்டளைக்கு வசியப்பட்டார்கள். அதன்படியே செய்தார். கள். கார் செல்லப் பாதை கிடைக்கவில்லை. உள்ளே செல்லும்போது கூட்டம் அதிகம் இல்லாத காரணத்தால் மந்திரியின் கார் சுலபமாகப் போய்விட முடிந்திருந்தது. இப்போது அப்படி முடியவில்லை. அமைதியாகக் கூடிக் கேட்டுக் கொண்டிருக்கும் மக்களை விலக்க விருப்பமின்றி. மிஸ் மங்கா தயங்கினாலும் அவள் தாயும் டிரைவரும் வேறு, விதமாக நினைத்துச் செயல்பட்டார்கள். டிரைவர் அருகே தேவஸ்தான ஆ. பீ சுக் கு ள் ளே போய் மந்திரிக்கே: டெலிபோன் செய்தான். கார் போக வழி இல்லை. என்பதை மட்டும் சொல்லாமல் சிவகாமிநாதன் மேடை, மேல் நின்று கொண்டு மந்திரியின் மானத்தைக் கப்ப, லேற்றிக் கொண்டிருப்பதையும் சேர்த்துச் சொல்லி வைத் தான் அவன். . . -

அப்போது எதையாவது சாக்கு வைத்துக் கூட்டத்தைக் கலைக்க வேண்டும் என்ற ஆசை மந்திரிக்கே உண்டாயிற்று. ஓர் எதிர்ப்பைக் கண்டு தங்களைத் திருத்திக் கொள்கிறவர் களைவிட எதிர்ப்பவர்களையே நசுக்கிவிட முயலும் மூன்றாம். தரமான அரசியல்வாதிகள்தான் இன்று. அரசியலில் பெரிய இடங்களில் இருக்கிறார்கள். அதிகாரத் தையும் பதவிய்ையும் அடைகிறவரை வாக்காளர்களின் காலில் விழுவதும், அதிகாரமும் பதவியும் கைக்கு வந்தபின் தங்களை யாரும் அசைக்க முடியாது என்ற திமிரோடு எந்த மக்களின்காவில் விழுந்து பதவிக்கு வந்தார்களோ, அந்த மக்களையே ஓங்கிக் காலால் மிதித்து உதைப்பதும் வழக்க மாகியிருக்கிறது.

ஜனநாயக யுகத்தின் மிகப் பெரிய பாவம் என்பது. அதிகார துஷ்பிரயோகம்தான். ஒவ்வோர் அரசியல் கட்சி யும் தன் பங்குக்குக் குறைவின்றி அந்தப் பாவத்தைச். செய்து கொண்டிருந்தன. வெளியே இருக்கிறவரை எது சரி, எது தவறு என்று துல்லியமாகப் பிரித்து உணரவும்: