122 நிசப்த சங்கீதம்
-நடுவே உண்டாக்கப்பட்ட வழியில் மந்திரியின் குடும்பத்தினரோடு கூடிய அந்தக் கார் போலீஸ் பாதுகாப் போடு பத்திரமாகச் சென்றது. பரபரப்பிலும் கலவரத். திலும் அந்தப் பகுதிகளில் எல்லாக் கடைகளையும் அடைத்து விட்டிருந்தார்கள். தெரு வெறிச்சோடியிருந். தது. கூட்ட மேடையைச் சுற்றி இரண்டொரு போலீஸ் காரர்கள் நின்று கொண்டு மைக்காரனையும் மேடை ஏற்பாடு செய்திருந்தவனையும் விரட்டிக்கொண்டிருந்: தார்கள். . - . . மணி இரவு ஒன்பதுக்கு மேலாகியிருந்தது. கோடம் பாக்கம் ஹைரோட்டிலேயே ஒரு ஹோட்டலில் இரவு: உணவை முடித்துக் கொண்டு சின்னியும், முத்துராமலிங்க மும் திருவல்லிக்கேணிக்குத் திரும்பியிருந்தார்கள். பஸ்ஸில். வருகிற போது இருவரும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. முத்துராமலிங்கத்தின் மனமோ வட. பழநியில் சிவகாமிநாதனுக்கும் அவர் மக்களுக்கும் நேர்ந்த வற்றை எண்ணியே குமுறிக் கொண்டிருந்தது.
அன்று வெள்ளைக்காரன் காலத்தில் இருந்த போலீஸும் தியாகி சிவகாமிநாதன் போன்ற தேச பக்தர் களையும் தொண்டர்களையும் இப்படித்தான் அடித்து விரட்டியது. இன்று இந்தச் சுதந்திர இந்தியாவின் போலீஸும் இவர்களை அடித்து விரட்டுகிறது, இவர் களுக்கு என்றுதான் விடியப் போகிறது? இந்தியர்களை அடிமைப்படுத்தி மகிழ்வதிலும் அடக்கி மகிழ்வதிலும், அந்நியர்களை விடச் சக இந்தியர்களே மேலும் மிக மோச மாக அல்லவா இருக்கிறார்கள்? அன்று வெளியாருக்கு. அடிமைப்பட்டு அடங்கியிருந்தோம். இன்று வேண்டிய வர்களுக்கே அடிமைப்பட்டு அடங்குகிறோம் என்பதுதான் வித்தியாசமாக இருந்தது.
அங்கிருந்து கொலைகாரன் பேட்டை வீட்டில்போய் தூங்கலாமா அல்லது கிருஷ்ணாம்பேட்டை மயானத். திலேயே இரவைக் கழித்துவிடலாமா என்று சின்னி முத்து