12s நிசப்த சங்கீதம்
சின்னி அந்தச் செயலை அவ்வளவாக இரசிக்க வில்லை. - .
வேலையிலே சேர்ர, நேரத்திலே இதுக்குப் போயி அலையிறியேப்பா...கிடைச்ச வேலை போயிடப்போவுது. பாபுராஜ் ஒரு கிறுக்குப் பய....மறுபடி இராகுகாலம்னு உன்னை வெளியே நிறுத்திடப் போறான்.' -
அதில்லே சின்னி ஒரே ஒரு நிமிஷம் பொறுத் துக்கோ...! இத்தனை பெரிய ஊர்லே அரசியல்ங்கற புதர்க் காட்டிலே ஒரே ஒரு தீரனை- ஒழுக்கமுள்ள நாணயஸ் தனை நான் முதல் முதலா இப்பத்தான் பார்க்கிறேன். அந்த மனுஷனுக்கு மரியாதை பண்ணிட்டு வந்துடறேன்.
'போ...சுருக்க வந்து சேரு'-என்று உண்ணாவிரதப் பந்தலுக்கு எதிர் பிளாட்பாரத்திலேயே விலகி நின்று கொண்டான் சின்னி - *
உண்ணாவிரதத்துக்காகப் போடப்பட்டிருந்த கிடுகுப் பந்தலில் கிடுகு பற்றாக் குறைய்ால் வெய்யில் ஒழுகியது. சிவகாமிநாதன், அவர் மகள், மகன் தொண்டர்கள் (Յեէք உண்ணாவிரதமிருந்தார்.
முத்துராமலிங்கம் அவருக்கு மாலையை அணிவித்து வணங்கிவிட்டு வந்தான். அப்போதே காலை பத்து மணிக்கு மேலாகியிருந்தது. பஸ் ஏறிச் சின்னியும் அவனும் கோடம் பாக்கம் போய்ச் சேர்ந்தபோது ஏறக்குறையப் பதினோரு மணி ஆகிவிட்டது. ஸ்டுடியோவில் பாபுராஜ் இல்லை. யூனிட்டோடு அவன் காந்தி மண்டபத்தில்அவுட்டோருக்குப் போயிருப்பதாகத் கூறினார்கள்.
சின்னி சொன்னது போலவே ஆகிவிட்டது என்பதை. உணர்ந்தபோது முத்துராமலிங்கத்துக்கு வருத்தமாக இருந்தது. தியாகி சிவகாமிநாதன் உண்ணாவிரதம் இருந்த. இடத்தைத் தேடிப் போய் அவருக்கு மாலையணிவித்ததில் ஏற்பட்ட திருப்தி வேலையைக் கோட்டை விட்டுவிட்டோம் : என்ற ஏமாற்றத்தில் மெல்லக் கரையத் தொடங்கியது. ஒரு