128 நிசப்த சங்கீதம்
அன்று காலை பதினொரு மணியிலிருந்து முத்து :ராமலிங்கத்தின் வாழ்க்கை சென்னை நகரோடும், அந்தத் தொழிலோடும் பிணைக்கப்பட்டது. அங்கே உதவிக் காமிராமேன் சண்முகம் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. கோடம்பாக்கம் ஹைரோடிலேயே கிம்ப்பகுதி கடை களாகவும், மாடிப் பகுதி முழுவதும் திருமணமாகாத தனிக் கட்டைகள் வாடகைக்குக் குடியிருக்கும் அறைகளாகவும் அமைந்திருந்த ஒரு கட்டிடத்தில் சண்முகம் வசித்து வந்தார் தனது அறையில் தங்கிக்கொள்ள வருமாறு அவரே முத்து ராமலிங்கத்தைக் கூப்பிட்டார். முத்துராமலிங்கத்துக்கு அவரைப் பிடித்துப் போய்விட்டது. சண்முகம் மதுரைக் ...காரர். நன்றாகப் பழகினார். நல்ல சுபாவங்கள் உள்ளவ
ராகத் தெரிந்தது.
'வழக்கமாக ஒவ்வொரு ரூம்லேயும் ரெண்டு பேர்தான் இருக்காங்க. நூத்தி எழுபது ருபா மாச வாடகை என் செளகரியத்துக்காக நான் இதுவரை தனியாத்தான் இருந் தேன். இப்ப உங்களைக் கூட இருக்கலாம்னு கூப்பிடறேன். என் வாடகை குறையும்கிறதுக்காக இல்லே. உங்க நட்புக் காகத்தான் கூப்பிடறேன்' என்று முத்துராமலிங்கத்திடம் சொன்னார் அவர். . . r
முத்துராமலிங்கம் அன்றி ரவு கொலைகாரன் பேட்டைக்குப் போய்ச் சின்னியிடம் சொல்லி விடைபெற்ற பின் தன்னுடைய சூட்கேஸ் முதலிய சாமான்களோடு கோடம்பாக்கம் ஹைரோடு மாடி லாட்ஜுக்குக் குடியேறிச் .சண்முகத்தோடு தங்கிவிட்டான். -
லாட்ஜ் 'உரிமையாளர் அந்த லாட்ஜ் திறக்கப்பட்ட சமயத்தில் பிரமாதப்பட்டு ஓடிய இளைஞர் உலகம்' என்ற தமிழ் சினிமாப் படத்தின் பெயரையே அந்த விடுதிக்குச் குட்டியிருந்தார். மாடிப் பகுதியில் இருந்த முப்பது அறை களில் இருபத்தைந்துக்கு மேல் சினிமா ஸ்டுடியோ படப் பிடிப்புக் கம்பெனிகளோடு தொடர்புடையவர்களே நிரந்தர அறை வாசிகளாகத் தங்கியிருந்தனர். சில நாட்களிலேயே