உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 133

என்பதற்காகத்தான். மிகக் குறைந்த தொகையான இந்த ஐம்பது ரூபாய் அவரைத் திருப்திப் படுத்தப்போவதில்லை என்றாலும் ஒன்றும் அனுப்ப முடியாமல் போவதற்கு இதை யாவது அனுப்ப முடிந்ததே என்ற திருப்தி அவனுக்கு இருந்தது. - - -

தமிழ்ச் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் ஒரு கதை. யிலே விரக்தியோடும் கோபத்தோடும். சென்னையை மகாமசானம் (பெரிய சுடுகாடு) என வர்ணித்திருப்பது நினைவுக்கு வந்தது அவனுக்கு.

அளிஸ்டெண்ட்- ஸ்டோரி டிபார்ட்மெண்ட் என்று அவன் பெயரை ஒரு வவுச்சரில் எழுதிக் கையெழுத்து வாங் கிக் கொண்டு முந்நூறு ரூபாயைக் கொடுத்தவுடன் வாங்கிக் கொண்டு நேரே உதவிக் காமிரா மேனும் அறை நண்பரு மான சண்முகத்திடம்தான் போனான் முத்துராமலிங்கம்.

"அண்ணே அறை வாடகைன்னு என் பங்குக்கு ஒரு தொகையைச் சொல்லுங்க...முழு வாடகையும் நீங்களே தரவேண்டாம்.' - - -

இப்ப வேணாம் சொன்னாக் கேளுங்க. பின்னாலே

பார்த்துக்கலாம். இந்த முந்நூறு ரூபாயிலே ஊருக்கும் அனுப்பிச்சி அறை வாடகையும் கொடுத்திட்டீங்கன்னா அப்புறம் உங்களுக்குச் சாப்பிட ஒண்ணும் மிச்ச மிருக்காது...'

பரவாயில்லை! நீங்க இதை வாங்கிக்குங்க... மீதத்தை நான் எப்படியோ நிரத்திக்கிறேன்...'

வாடகை வேணாம்னு சொல்ற இந்த உரிமையையும் நெருக்கத்தையும் அந்நியோந்நியத்தையும் நீங்க எனக்குத் தரத் தயாராயில்லேன்னா உடனே நீங்க தனியா வேற ரூம் பார்த்துக்கறதே நல்லது..."

'நான் தப்பா ஒண்ணும் சொல்லல்லே..."

நி-9