உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I & 5

வத்திலுக்கும். வழக்குக்கும். கோர்ட்டுகளுக்கும், செல வழித்துக் கொண்டே தியாகியின் குரல். பத்திரிகையை வெளிக்கொணரத் திணறினார் அவர். .

ஒரு நல்ல மனிதனைப் பொது வாழ்க்கைத் துன்பங்கள் போதாதென்று பொருளாதாரத் தொல்லைகளும் பிடுங்கித்

தின்றன. முத்துராமலிங்கமே தியாகி சிவகாமிநாதனைத் தேடிச் عجمی ، சென்று ஒரு யோசனை சொன்னான். வழக்கு நிதிக்காக ஒரு பொதுக் கூட்டம் போட்டு அந்தக் கூட்டத்திலேயே துண்டு ஏந்தி வசூல் செய்யலாம் என்று முடிவு செய்யப் பட்டது. -

- கூட்டத்தைச் சூளைமேடு பகுதியில் வைத்துக் கொள்ள ஏற்பாடாயிற்று. சிவகாமிநாதன் திடீரென்று முத்து ராமலிங்கத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கேட்டார்: х • . . .

தம்பி கல்லூரி நாட்களிலே மேடையிலே முழங்கி விருக்கிறதாகச் சொல்றிங்க கவியரங்கங்களிலே பிர மாதமாப் பாடியிருக்கிறதாச் சொல்றீங்க... இப்ப மட்டும் என்ன ஆச்சு? சூளைமேடு, பொதுக் கூட்டத்திலே எனக்கு முன்னாடி நீங்க பேசணும்...'

"நான் வேற எதுக்குங்க... முழு நேரமும் நீங்களே எடுத்துக்கிட்டீங்கன்னா நல்லா இருக்கும். ஜனங்க. உங்க

பேச்சைக் கேக்கத்தான் ஆர்வமா வந்து கூடுவாங்க...'

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் தம்பி! நானே

உங்களைப் பத்தி எடுத்துச் சொல்லிக் கூட்டத்திலே உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நீங்க பேசுங்க... நீங்கபேசினப்பறம்தான் நான் பேசப் போறேன்...'

நீங்க விரும்பினால் நான் மறுக்கலே.

நான் விரும்பறேன்! நீங்க மறுக்கக் கூடாது, மறுக்க முடியாது. நீங்களும் பேசlங்க.போஸ்ட்டர்லே உங்க பேரைப் போடச் ச்ொல்லிடறேன்...” .” ή ,