நா. பார்த்தசாரதி - I 37
வருடிகள், சந்தர்ப்பவாதிகள், அரைகுறைத் திறமைசாலி களான முழுப்பாசாங்குக்காரர்கள்...... இவங்க தானே பொழைக்கத் தெரிஞ்சவங்க சிவகாமிநாதன் இவங்கள்ளே -ஒருத்தர் இல்லைங்கிறது அவருக்குப் பெருமைதானே ஒழியக் குறைவில்லை." * -
சரி சரி! போதும்ப்பா...உங்கிட்டப் பேசி மீள முடியாது. இந்தத் தெர்க்கத்திக்கார ஆளுங்கள்ளாமே ஒரே வாயாடிங்கப்பா...' என்று சிரித்து மழுப்பியபடி விவாதத் திலிருந்து நழுவித் தன்னை விடுவித்துக் கொண்டான் பாபு -ராஜ். -
சூளைமேடு. கூட்ட நாளன்று மாலையிலேயே சிந்தாதிரிப்பேட்டை .ெ ச ன் று சிவகாமிநாதனையும் அழைத்துக்கொண்டு பொதுகூட்ட மேடைக்குச் சென்றான் முத்துராமலிங்கம். அன்று பிரம்மாண்டமான கூட்டம் திரண்டிருந்தது. முதலில் சில கல்லூரி மாணவர்கள் பேசி னார்கள். சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, நகரின் பொறியியற் கல்லூரி, கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தியாகி சிவகாமிநாதனின் போராட்டங்களுக் கும் இலட்சியங்களுக்கும் தங்கள் ஆதரவு உண்டு என்பதைத் தெரிவித்தார்கள். - -
அவர்கள் முடித்த்தும் முத்துராமலிங்கத்தைப் பேச
அழைக்குமுன் தியாகி சிவகாமிநாதனே அவனைக் கூட்டத் துக்கு அறிமுகப்படுத்திச் சில வார்த்தைகள் முன்னால் பேசினார். . . . . . . . . . .' 3.
"நண்பர்களே! பொதுமக்களே! லஞ்ச ஊழல்களையும் சந்தர்ப்பவாத அரசியலையும் எதிர்த்துச் சுமார் முப்ப தாண்டுக் காலமாகத் தனித்துப் போராடி வருகிற எனக்குத் தற்செயலாக ஒர் அரிய இளம் நண்பர் சமீபத்தில் கிடைத்தி ருக்கிறார். அவர் அஞ்சாதவர். அறிவுக் கூர்மை உள்ளவர். சிந்திக்கத் தெரிந்தவர். தென்னாட்டுச் சிங்கமாக விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத் .ே த. வ ரி ன் பெயரைப் பெற்றவர். தார்மீகக் கோபங்கள் நிறைந்த இளைஞரான