பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 நிசப்த சங்கீதம்

அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படு, கின்றேன்! எனது இயக்கம் சமூக சுத்திகரிப்புத் தன்மை கொண்டது. சமூகத்தைத் துப்புரவு செய்யப் புறப்படுகிற, வனின் சொந்த வாழ்க்கை அபாயங்களும் எதிர்ப்புக்களும் சூழ்ந்ததாகத்தான் இருக்கும். வசதிகளும் கிடைக்காது". வசதியும், புகழும் இல்லாத இந்த அறப் போராட்ட இயக் கத்தில் என்னோடு துணிந்து இறங்க முன்வரும் இளைஞர் களைப் பார்க் கும்போது எதிர்காலத்தில் இந்த நாடு உருப் பட்டுவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டாகிறது. இன்ஸ்டண்ட் காபி, இன்ஸ்டண்ட் டீ என்பது போல் பொது வாழ்வில் சகல துறைகளிலும் நீடித்த உழைப்போ தியாகமோ இல்லாமல் உடனே இன்ஸ்டண்ட் புகழுக்கு ஆசைப்படுகிறவர்கள் காத்து நிற்கிறார்கள். அப்படிச் சூழ்நிலையில் அதிகப் புகழும். விளம்பர்மும் இல்லாத என்னைத் தங்கள் தலைவனாக ஏற்கும் இந்த இளைஞர் களைப் பார்த்து நான் வியந்து நிற்கிறேன். இந்த இளைஞர் களில் என்னை அதிகம் கவர்ந்திருக்கும் துணிச்சல்காரரான திரு. முத்துராமலிங்கத்தை இப்போது உங்கள் சார்பாக இங்கே பேச அழைக்கிறேன்.'

இப்படிக் கூறித் தியாகி சிவகாமிநாதன் அறிமுகப் படுத்தி வைத்தபோது முத்துராமலிங்கம் பேச எழுந்ததும் அவனை வரவேற்கும் கரகோஷம் வானைப் பிளந்தது.

அப்படிக் கைதட்டியவர்களில் ஒரு மூலையில் பெண்கள் பகுதியில் மிஸ். மங்காவையும் பார்த்தான் முத்துராம. லிங்கம். அவளுடைய முகத்தின் மலர்ச்சியும் கைதட்டும் போது சிறுகுழந்தைபோல் அவள் காட்டிய அதிக. உற்சாகமும் அவனுக்கு வியப்பளித்தன. அவளோடு சேர்ந்து ஜோடியாக இன்னும் யாரோ தெரியாத ஒர். அழகிய இளம் பெண்ணும் அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் வந்திருக்கிறாள் என்ற உற்சாகமும் சேர்ந்து, கொண்டது. முத்துராமலிங்கத்தின் பேச்சில் உணர்ச்சி, ஆவேசம் கருத்து மூன்றும் கலந்து திரிவேணி சங்கமமாகப் பெருக்கெடுத்தது. -