140 நிசப்த சங்கீதம் ,
தோழியும் மற்றவர்களோடு சேர்ந்து பலமாகக் கைதட்டிக் கொண்டிருந்தார்கள், முத்துராமலிங்கத்தின் உற்சாகம் அதிகமாகியது. அவன் மேலும் பேச்சைத் தொடர்ந்தான்.
20
- இளைஞன் முத்துராமலிங்கம் பேசி முடித்தபின் தியாகி சிவகாமிநாதன் பேசத் தொடங்கினார். "திருடர்களையும் கொலைகாரர்களையும், கொள்ளையடிப்பவர்களையும் பதுக்கல், கள்ள மார்க்கெட் கலப்படப் பேர்வழிகளையும், லஞ்ச ஊழல் மன்னர்களையும் அரெஸ்ட் செய்து உள்ளே தள்ளத்துப்பில்லாமல் உண்மையை அஞ்சாமல் பேசுகிறோம் என்ற ஒரே காரணத்துக்காக என் போன்ற ஏழைத் தேச பக்தர்களை அரெஸ்ட் செய்கிறார்கள். சாத்தான்கள் வேதம் ஒதுகின்றன. நல்லவர்களும், நல்லதைச் சொல்ப வர்களும் ஒடுக்கப்படுகிறார்கள். சமூகத்தின் எந்தப் பெரிய அல்லது சிறிய அமைப்புக்களிலும் லஞ்ச ஊழல்களும், தவறு களும் புரிகிற பெரும்பான்மையோருக்கு-யோக்கியர்களாக ஊடாடும் சிறுபான்மையோர் இடையூறாகி விட்டார்கள். லஞ்சமும், ஊழலும், சுயநலமும், திட்டமிட்டு மக்களை ஏமாற்றுவதும் முன்பெல்லாம் தனிமனிதர்களின் குற்றங்க ளாக இருந்தன. இன்று அவையே சில இயக்கங்களாகவும், அமைப்புக்களாகவும், கட்சிகளாகவும்கூட வளர்ந்து விட்டன, என்னைப் போல இதை எடுத்துச் சொல்பவர்கள். எப்போதும் அபாயத்துக்குள்ளாகிறார்கள். ஆபத்துக்குள் ளாகிறார்கள். . . . . -
பொதுமக்கள் அயரும் நேரத்தில் அவர்களைத் தாக்கும் கொசுக்கள் போல மூட்டைப்பூச்சிகள் போலச் சமூக விரோத சக்திகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. சமூக ஆரோக்கியம் என்ற இரத்தத்தை இவை மறைந்திருந்து வந்து உறிஞ்சிவிட்டு மறுபடி மறைந்து கொள்வது என்பது வழக்கமாக இருந்து வருகிறது....... -