142 நிசப்த சங்கீதம்
சிறிது தூரம் நகர்வதற்குள்ளேயே மங்காவுடன் கூட. இருந்த மற்றோர் இளம் பெண் ஓடிவந்து நாலாக மடித்த ஒரு துண்டுக் காகிதத்தை அவனிட்ம் நீட்டினாள்.
அவசர அவசரமாக மடிப்புக்களை பிரித்துக் காகி தத்தை மலர்த்திப் படித்தபோது, நாளை மாலை மூன்று மணிக்கு அமெரிக்கன் செண்டர் லைப்ரெரியில் அல்லது மூன்றரை மணிக்கு 'டிரைவ் இன்"னில் சந்திக்க முடியுமா?’ என்று கேட்டிருந்தாள் மங்கா. அவளுடைய சிநேகிதி அவனது வாய் மொழியில் அல்லது ஜாடையில் பதில் கிடைத்தால் கூடப் போதும் என்று கூட்டத்தின் நடுவிலே தயங்கி எதிர்பார்த்து நின்றாள். -
'வர் டிரை பண்றேன்னு சொல்லுங்க...நாளை எனக்கு. வேலை எப்படியிருக்கோ...தெரியலே. .
இதைச் சொல்லிவிட்டு மறுபடி வசூலுக்காகக் கூட்டத். தினுள் கலந்து கரைந்தான் அவன். - -
அன்றைக்குச் சூளைமேடு பொதுக் கூட்டத்தில் ரூபா யாக இரண்டாயிரத்து எழுநூற்றுச் சொச்சமும் தங்கமோதி ரங்கள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றினால் மேலும், பத்தாயிரம் மதிப்புள்ளவையும் வசூலாகி இருந்தன. பேச்சாளர்கள் கூட்டத்தை உணர்ச்சிக் கொந்தளிப்பின் எல்லைக்கே கொண்டு போயிருந்தார்கள். . . .
மறுநாள் குன்றத்துாருக்குப் பக்கத்தில் எங்கேயோ ஒரு தென்னந்தோப்பில் ஸ்டண்ட் காட்சி ஒன்றிற்காக உதைக் கிறுவர்கள், உதைபடுகிறவர்கள் சகிதம் அவுட்டோர் யூனிட் புறப்பட்டுப் போயும் வெயில் வருவதற்கு மறுத்து மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் ஷாட்டிங் கான்ஸ்லாகிப் புகல் பன்னிரண்டு மணிக்கே எல்லாரும் சென்ன்ை திரும்பி விட் டார்கள். உதவிக் காமிராமேன் சண்முகம் அதை இப்படிக் கிண்டல் செய்தார். . . . . . . . . .
"இவங்க ஹீரோ, ஹீரோயின், வில்லன், ஸ்டண்ட். ஆளுங்க- எல்லாரிட்டவும் கால்வீட் வாங்கினாங்க......