霍圣夺 நிசப்த சங்கீதம்
நிற்க விரும்புகிறவன் நான். ஒழுக்கம், நாணயம், உழைப்பு, சமூகநலன் இவை எல்லாமே நியூஸ்ன்ஸ் என்று கருதும் தடலடி முன்னேற்றப் பேராசையுள்ள ஒருத்தரின் மகள் நீ...' -
"இருக்கலாம். ஆனால் எனது பகவத் கீதை நேற்றைய கூட்டத்தின் பிரசங்கத்தில் எனக்குக் கிடைத்து விட்டது. நான் இன்று இப்போது மிகவும் தெளிவாக இருக்கிறேன்." - - - s 'அப்படியானால் இப்போதே என்னோடு கிளம்பி வா! தியாகி சிவகாமிநாதனிடம் போகலாம். அவர் முன்னால் நீ பிரதிக்ஞை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைக்கு இந்த நாட்டிலுள்ள எல்லா அரசியல் இயக்கங்களிலும் ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் நியூஸன்ஸ் வேல்யூ தான் தரப்படுகிறது. அடிப்படை ஒழுக்கத்தையும் நேர்மையை யும் தேசபக்தியையும் முதலில் வற்புறுத்துகிற ஒரே மனிதர் சிவகாமிநாதன்தான்.' -
'நீங்கள் கட்டளையிடும் பட்சத்தில் நானே அவருடைய இயக்கத்தில் பிரதிபலன் எதிர்பாராத ஒரு சேவகியாகச் சேரத் தயார்" - - - 'அது உன்னைப் பலவகைகளில் தர்ம சங்கடத்தில்
ஆழ்த்தும். . - 'தர்மசங்கடங்கள் தவிர்த்து தெளிவு ஏற்பட்டு எதை எதிர்க்க வேண்டும் எதை ஆதரிக்க வேண்டும் என்ற ஞானம் பிறக்கிற ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வோர் இடத்திலும் ஒரு பகவத் கீதையே பிறக்குதுன்னு நீங்கதானே நேத்து பேசிtைங்க...?' * . ‘. . . . . - - "அந்தப் பேச்சின் கூர்மையையும், நிர்தாட்சண்யத்தை
யும் நீ சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாய் அல்லவா?"
"தவறாகவோ அரைகுறையாகவோ புரிந்து கொண் டிருந்தால் நான் இன்று இங்கே தேடி வந்து உங்களைச் சந்தித்திருக்கவே மாட்டேன்.