நா. பார்த்தசாரதி 147
காபியைப் பருகிவிட்டு அ:ெனைச் சிந்தாதிரிப் பேட்டைக்கு அழைத்தபோது மலர்ந்த முகத்தோடு துணிந்து அவள் அவனோடு புறப்பட்டாள். காரை அமெரிக்கன் செண்டர் வாசலிலிருந்தே திருப்பி அனுப்பி விட்டதாகவும் சொன்னாள். -
21
ámł
அவளுடைய மனமாற்றமும், உறுதியும் அவனுக்கு வியப்பை அளித்தன. நடைமுறையில் அது அவளை எந்த அளவு பாதிக்கும் என்று எண்ணியபோது, கவலையாகவும் இருந்தது. ப்ெரிய பதவியிலுள்ள சொந்தத் தந்தையைப் பகிரங்கமாக எதிர்ப்பதற்கு அவள் என்னென்ன விலைகள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அவனால் கற்பனையே செய்ய முடியவில்லை. - -
மந்திரி சிதம்பரநாதன் தன் மகள் தன்னை ஆதரிக் காமல் ஒதுங்கியிருப்பதைக்கூட மன்னிக்கலாம். ஆனால் தனது எதிரிகளோடு அவள் சேருவதைப் பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ அவரால் முடியாது என்பதை அவன் முன்கூட்டியே அனுமானம் செய்து கொள்ள முடிந்தது. அவள் துணிந்து தன்னைச் சோதனைக்குள்
ளாக்கிக்கொள்கிறாள் என்பதும் அவனுக்குப் புரிந்தது.
டிரைவ் இன்னிலிருந்து முத்துராமலிங்கமும், மங்கா வம் சிந்தாதிரிப்பேட்டைக்குப் போய்த் தியாகி சிவகாமி நாதனைச் சந்தித்தபோது பொழுது சாய்ந்து இருட்டத் தொடங்கியிருந்தது. நன்றாக இருட்டத் தொடங்கியிருந்த, அந்த நேரத்தில்தான் மங்காவின் மனத்தில் ஒளி பரவிக் கொண்டிருந்த்து தான் செல்வாக்குள்ள ஆளுங்கட்சி மந்திரி ஒருவரின் மகள் என்பதை மறந்து ஆகாசத்தில் மிதப்பது போன்ற உல்ல்ாசத்தோடு முத்துராமலிங்கத் துடன் சென்றாள் அவள். பஸ்ஸிலும், நடந்தும் அவனோடு செல்ல அவள் தயங்கவில்லை. -