பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 13

ஆண்மையின் காப்பீர்யம் நிறைந்த அந்த அழகான சிரிப்பின் பிறப்பிடமான அவன் முகத்தை ஒருகணமாவது முழுமையாக நேருக்கு நேர் சந்தித்தே தீருவதென்று புறப் பட்ட அவளது பார்வை கை சுளுக்கிக் கொண்டவன் எறிந்த கல் மாதிரி அடைய வேண்டிய இல்க்கை அடையுமுன்பே நடுவிலேயே துணிவிழந்து விழுந்துவிட்டது. :

'மறுபடி பார்க்கிறேன். புரொவிஷனல் சார்டிபிகேட் வாங்க யூனிவர்சிடி வரை புறப்பட்டு வந்தேன். அப்பிடியே உங்களை எல்லாம் பார்த்திட்டுப் போகணும்னு தோணிச்சு. அதான் வந்தேன்'...என்று அங்கிருந்து விடை பெற்றான் முத்துராமலிங்கம். அவன் புறப்படுவதற்குள் அந்தக் காம் பவுண்டில் கூட்ட்மும், மாலையேந்திய கைகளும். கார் களின் எண்ணிக்கையும் அதிகரித்தன. திடீரென்று அமைச்சர் சிதம்பரனார் வாழ்க!-என்ற வாழ்த் தொலியுடன் ஒரு பெரிய ஊர்வலம் மாதிரிக் கட்சிக் கொடி களுடன் கூடிய கூட்டம் ஒன்று காம்பவுண்டுக்குள் மிகவும்

ஆரவாரமாக நுழைந்தது. . . . -

'உங்கப்பாமினிஸ்டராயிட்டாரு...இந்தா சாக்லேட்... ஒண்ணுக்கு ரெண்டா எடுத்துக்க.-என்று ஒருத்தர் தட்டு நிறைய சாக்லேட் குவித்துக்கொண்டு வந்து நீட்டினார். மங்கா தட்டை வாங்கி முத்துராமலிங்கத்திடம் புன்முறுவ லோடு முதலில் நீட்டினாள். . * - - 'மறுபடியும் பாராட்டுக்கள்.’’ என்று ஒரே ஒரு சாக்லேட்டை எடுத்துச் சட்டைப் பையில் போட்டுக்கொண்

டான் முத்துராமலிங்கம், . . .

என்ன பையிலே போட்டுக்கிட்டீங்க...? சாக்லேட் சாப்பிடறதில்லையா?"

இல்லே. நாம சாப்பிடற ஒவ்வொரு சாக்லேட்டும் நம்ம பல்லைச் சாப்பிட்டுப்போடும்னு பயப்படறவன் நான்! பொதுவா எனக்கு இனிப்புன்னால்ே பிடிக்காது மிஸ்,

மங்கா!' r - பின்ன என்னதான் பிடிக்கும்: