148 - நிசப்த சங்கீதம் ,
அவர்கள் போய்ச் சேர்ந்தபோது வீட்டின் ஒரு பகுதியா யிருந்த அச்சகத்தில்-அச்சக உடையில் அச்சுக் கோக்கும். வேலை செய்து கொண்டிருந்தார் சிவகாமிநாதன்.
'இது என் சிநேகிதி......நேத்துக் கூட்டம் கேட்டப் பறம் நம்ம இயக்கத்திலே சேரனும்னு ஆசையோட புறப்பட்டு வந்திருக்காங்க...... * *
சிநேகிதியா? காதலியா?’ - - - - அவர் இப்படிக் கேட்டதும் அவள் முகம் மலர்ந்து சிவந்தது. முத்துராமலிங்கம் அவரது குறும்புக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் புன்னகை புரிந்தான். - அவரே மேலும் பேசினார்: . -
எல்லாக் காதலிகளும் முதலில் சிநேகிதிகளே! ஆனால் எல்லாச் சிநேகிதிகளும் காதலிகள் ஆகிவிட முடியாது.” - -
- சிநேகிதியா காதலியா என்பதைவிட முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வேறு ஒர் உறவு இருக் கிறது ஐயா!' - -
"அது என்ன உறவு அப்படி?’’
இவள் மந்திரி சிதம்பரநாதனின் மகள்." சிவகாமிநாதன் ஒரு வினாடி என்ன பதில் சொல்வ. தென்று தெரியாமல் திகைத்து நின்றுவிட்டார். இதை அவர் எதிர்பார்க்கவில்லை. முத்துராமலிங்கமே குறுக். கிட்டுச் சொன்னான். . . . . .
"" ஆனாலும் இவங்க அப்பாவோட போக்கு இவ்ங். களுக்குப் பிடிக்கலே...பொது வாழ்க்கையிலே இருக்கிறவங்க
சுத்தமா இருக்கணும்னு நெனைக்கிறாங்க...'
சிவகாமிநாதன் மங்கர்வை நேருக்கு நேராகவே கேட்டார். - - - - --
புரியுது. ஆனா இதுலே பல தர்மசங்கடங்களும் சோதனைகளும் வருமே அதைத் தாங்கிக்கிற சக்தி உனக்கு இருக்காம்மா...'