உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 151

டிரடிலில் ரத்தச் சிவப்பான நிறத்து மையில் அந்த வாரத்துத் தியாகியின் குரல்’ இதழுக்கான டைட்டிலை அச்சிட்டுக்கொண்டிருந்தார் அவர். ஊழல் மந்திரியும் உபயோகமில்லாத அரசியலும் என்று அவளுடைய தந்தையைப் பற்றிய காரசாரமான தலையங்கம் அச்சாகிச் சூடாக அங்கே இருந்தது. -

அப்போது அங்கே தற்செயலாக வந்த ஒரு பிரமுகருக்குச் சிவகாமிநாதன் அவளை அறிமுகப்படுத்தி வைத்தபோது, அவர் தமது அறிமுக வார்த்தைகளை முடிப்பதற்குள்ளேயே..."இவங்க எப்படி இங்கே...? அமைச்சர் நாதனோட மகளாச்சே...?' என்று நம்பமுடி யாமல் இழுத்தார் வந்தவர்.

'ஏன்? இவங்களை இங்கே பார்க்கிறதை உங்களாலே நம்ப முடியலையா? வேடிக்கைதான்! நீங்க இவங்களை இங்கே பார்க்கறதையே நப்ப மாட்டேங்கறிங்க இவங்க என்னடான்னா என்னையும் என்னோட ஊழல் ஒழிப்பு இயக்கத்தையும் நம்பி இங்கே தேடி வந்திருக்காங்க. ஆச்சரியமா இல்லையா இது? . . . . .

என்று சிரித்தபடியே அவளைச் சுட்டிக்காட்டி வந்திருந்த அந்தப் புது மனிதரிடம் வினிவினார் சிவகாமி நாதன். மங்காவோ ஆர்வம் தணியாத மனநிலையோடு தந்தையின் ஊழல்களைத் தாக்கி எழுதப்பட்ட தியாகியின் குரல் அச்சுப்படிகளைப் படிக்கத் தொடங்கினாள். சிவகாமிநாதன் செல்லமாக அவளைக் கடிந்து கொண்டார்.

'இதெல்லாம் எதுக்கம்மா இ ப் ப? அப்புறம் படிக்கலாமே?' .’ -

"நீ தியாகியின் குரலுக்கு ஒரு சந்தாக் கட்டிடனும் நான் எப்பவோ கட்டியாச்சு என்றான் முத்துராமலிங்கம். உடனே அவள் தன், கையிலிருந்த டம்பப் பையைத் திறந்து ஒரு புது நூறு ரூபாய் நோட்டை எடுத்து முத்து ராமலிங்கத்திடம் நீட்டினாள்.