உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 ፻፴፩

மந்திரியாயிருக்கும் தந்தையைப் பற்றி மகள் இப்படிப் பேசியது இன்ஸ்பெக்டரையும் போலீஸ்காரர்களையும் திகைக்க வைத்தது. அப்பாவுக்கும் பெண்ணுக்கும் ஏதோ தகராறு என்று மட்டும் அவர்களுக்கு அப்போது புரிந்தது.

"தயவு செய்து உங்க சண்டையிலே எங்களை வம்புலே மாட்டி வச்சிடாதீங்கம்மா! மந்திரியை விரோதிச்சுக் கிட்டாத் தண்ணியில்லாக் காட்டுக்கு , மாத்திப்பிடு வாங்க...” - - ' : : ب

ஆளுங் கட்சிக்கும், மந்திரிங்களுக்கும் மட்டுமே நீங்க காவலர்னு நினைச்சுக்கிட்டுச் செயல் படற்தாலே வர்ர வினை இது. ஒரு கட்சி இன்னிக்கி ஆள வரும். நாளைக்கிப் போகும். ஜனங்க நிரந்தரமா இருப்பாங்க. ஜனங் களுக்குத்தான் நீங்க காவலரா இருக்கனும்’-என்று மங்கா கூறியதை எதிர்த்துச் சொல்லவும் முடியாமல், ஆதரித்து ஏற்கவும் இயலாமல் இன்ஸ்பெக்டர் நடுவாக இருந்தார். சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் முன்பாகப் போய் ஜீப் நின்றது. . . . . . . .

சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்காத குறையாக அவளை மிகவும் மரியாதையாகவும் பவ்யமாக்வும் ஸ்டேஷ னுக்குள் அழைத்துச் சென்றார் அவர். - . .

காபி குடிக்கிறீங்களாம்மா?' "இல்லை. வேண்டாம்.'; - முதலில் இன்ஸ்பெக்டர் ஃபோன் செய்து பேசிவிட்டு அப்புறம் ஃபோனை மங்காவிடம் கொடுத்தார்.

அள்ை ஃபோனை வாங்கிக் காதருகே கொண்டு செல் வதற்குள்ளேயே தந்தையின் குரல் சீறி வெடித்தது.

"உனக்கு எதுக்கும்மா இந்த வம்பெல்லாம்; வெளி நாட்டிலே படிக்கப் போறவ லோகல் பாலிடிக்ஸ்ல எல்லாம் ஏன் தல்ையிடறே? எல்லா ஏற்பாடும் முடிஞ்சாச்சு.ரிஸ்ர்வ் பாங்க் விவகாரம் கூடச் சரியாயிடிச்சி. பாஸ்போர்ட்கூட ரெடி. அடுத்த வாரமே புறப்படலாம்.'