- நா. பார்த்தசாரதி 159
"அப்படிச் செஞ்சா நீங்க என்னை எங்கப்பாவுக்குக் காண்பிச்சுக் குடுத்துடlங்கன்னு அர்த்தம்! அந்த வளை யலை வச்சுத்தான் அவரே. உங்கமேலே திருட்டுக்குத்தம் சுமத்தறத்துக்குப் போலீலை அனுப்பி வச்சிருக்காரு..."நான் அது திருட்டு இல்லே. நானே விரும்பி நன்கொடையாக் குடுத்தது தான்’னு போலிஸுக்கும் எங்கப்பாவுக்கும் பதில் சொல்லிவிட்டு வந்திருக்கேன். இப்போ நீங்க அதைத் திருப்பிக் குடுத்து என்னை எங்கப்பாவுக்கும் போலிஸுக்கும் முன்னாடி "லெட் டவுன் பண்ணப் போlங்களா சார்?'
சிவகாமிநாதன் யோசித்தார். முத்துராமலிங்கம் அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தான். சில விநாடிகள் யோசனைக்குப்பின் அவர் முத்துராமலிங்கத்தையும் மங்கா வையும் பார்த்துத் தீர்மானமான குரலில் நிதான்மாக ஒவ்வொரு வார்த்தையாய் அளந்து எண்ணிச் சொன்னார்.
"சரி! என்ன வந்தாலும் வரட்டும். நான் அந்த வளையல்களைத் திருப்பித் தரலே! நீயும் சிந்தாதிரிப்பேட் டைக் கூட்டத்திவே எங்களோட மேடையிலே பேச அநுமதிக்கிறேன். ஆனா ஒண்னு மட்டும் ஞாபகம் வச்சுக் கோம்மா! இதுவரை இருந்ததைவிட இனிமேல்தான் பொதுவாழ்க்கையில்ே எனக்குச் சோதனைகளும், விரோ தங்களும், அபாயங்களும் அதிகம்கிறதை நீ புரிஞ்சுக் கணும். ஒரே காரணம் நீ இப்போ எங்களோட வந்தருச் கிறதுதான்-அதுக்காக எத்தனை உறுதி வேணுமோ அத்தனை உறுதி உங்கிட்டக் குறையாம இருக்கணும். நீயே உறுதியா இல்லாட்டிக் கஷ்டம்தான் அம்மா."
23
இரவு ஒன்பது மணி ஆனதும் முத்துராமலிங்கம் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து கோடம்பாக்கம் புறப்படத் தயாரானான். மங்கா வீடு திரும்பப் போகிறாளா அல்லது சிவகாமிநாதன் குடும்பத்தினருடனேயே தங்கப் போகிறாளா என்பது தெரியவில்லை. அவளுடைய தந்தை