உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 163.

வந்திருக்கிறது வேற யாரோ இல்லியே? உங்கம்மா தானே? நீங்களே போய்ப் பார்க்கறதிலே தப்பு ஒண்ணு

மில்வியே...?’’ - - x.

சிவகாமிநாதனின் மகள் சுபாவமாகத்தான் இப்படிக் கூறினாள். ஆனால் மங்கா அதைச் சுபாவமாக எடுத்துக் கொள்ளும் மனநிலையில் அப்போது இல்லை. விறுவிறு வென்று எழுந்துபோய் வாயிற் கதவைப் படிரென்று அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு வந்தாள் மங்கா. - -

'நீங்க துரங்கலாம். இனிமேல் வாசற் கதவை யாரா வது தட்டினா நான் போய்ப் பார்த்துக்கிறேன்' என்று சிவகாமிநாதனின் பெண்ணிடம் சொல்லிவிட்டுப் பாயில் உட்கார்ந்து கொண்டாள் அவள். - - - - -

நீங்க கோபத்திலே கதவை அடைச்சிட்டீங்க! நாங்க தான் தெருவிலே தடுத்து நிறுத்திவச்சுக் கதவைச் சாத்தி அவமானப்படுத்தறோம்னு உங்கம்மா நினைச்சுக்கப் போறாங்க. பாவம்' என்றாள் சிவகாமிநாதனின் மகள். - .

-அவளுடைய பண்பாடு காரணமாக எழுந்த பயத்தை மங்கா புரிந்து கொண்டாலும் அம்மாவின் திடீர் வருகை காரணமாக அவளுக்கு ஏற்பட்ட கடுமை ஒரு சிறிதும்

தணியவில்லை.

வெளியே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. சாதாரணமாகவோ, நாகரிகமாக அல்லாமல் முரட்டுத் தனமாக அது தட்டப்பட்டது. அம்மாவே இற்ங்கி வந்து தட்டுகிறாளா அல்லது டிரைவரைவிட்டுத் தட்டச் சொல் கிறாளா என்பது புரியவில்லை. அகாலத்தில் இன் னொருவர் வீட்டுக் கதவை இப்படி அசுரத்தனமாகவும், அநாகரிகமாகவும் தட்டுகிற மமதையும், அதிகார போதை யும் அவளுக்கே எரிச்சலூட்டின. எரிச்சலோடு எழுந்து போய்க் கதவைத் திறந்தான் மங்கா. - .