நா. பார்த்தசாரதி 辺7型
வந்தவர்கள் சிவகாமிநாதனைச் சந்திக்க வேண்டும் என்றார்கள். அவர் அச்சகப் பகுதியில் இருந்தார். அவர் களை அச்சகத்துக்குள் அழைத்துச் சென்றான் முத்துராம லிங்கம், கம்போளிங் செய்ய ஏற்ற உடையில் இருந்த சிவகாமிநாதன் அவர்களை மிகவும் மரியாதையாக வரவேற்றார். .
அச்சுப் பிழை திருத்தப் பழகியவாறு அங்கே அமர்ந் திருந்த மங்கா இவர்களைப் பார்த்ததும் வெறுப்போடு உள்ளே எழுந்து செல்ல முயன்றாள்.
'நீ எதுக்கும்மா எந்திரிச்சுப்போறே! நீயும் இரு' என்று அவளைக் கையமர்த்தி அமரச் செய்தார் சிவகாமி
நாதின. - . . - -
வந்த பிரமுகர் சற்றே கோபமாகத் தொடங்கினார் : "அரசியல்லே நாம ஒருத்தருக்கொருத்தர் எதிரெதிர்த் தரப்பிலே இருக்கோம். ஆனா அதுக்காக ஒருத்தரோட குடும்பத்திலே இன்னொருத்தர் தலையிட்டு லாபம் தேடற. துங்கறது. அவ்வளவு நல்லாப் படலே...மினிஸ்டர் இதை, ரொம்பக் கடுமையா நினைக்கிறாரு. அதைச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்.
'நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க.எனக்கு யார் குடும்பத்திலேயும் தலையிடனும்னு அவசியமில்லே. அதே சமயத்திலே பொதுவாழ்வில், லஞ்ச ஊழலை ஒழிக்க நான் தொடங்கியிருக்கிற இயக்கத்திலே யாராவது அந்தரங்க சுத்தியோட வந்து சேர்ந்தா அவங்களை நான் சேர்த்துக்க மாட்டேன்னும் சொல்ல முடியாது." , • - 'உங்க மக எங்க கட்சியிலே வந்து சேர்ந்து எங்ககூடத் தங்கிட்டா நீங்க அதைச் சும்மா விட்டுவிடுவீங்களா?' .
என் மகள் அப்படிச் செய்யமாட்டாள். எது நல்லது
எது கெட்டதுன்னு அவளுக்கு நல்லாத் தெரியும். அதை யும் மீறி அவ அப்படி எனக்குப் பிடிக்காத தரப்பிலே சேர்ந்தா அதிலே நான் தலையிடமாட்டேன்." . . . .