நா. பார்த்தசாரதி 17 3
நாங்க் பயமுறுத்தறதா நெனைக்காதிங்க. பின்னாலே இதுக்காக நீங்க ரொம்ப வருத்தப்பட வேண்டி ஆயிருக்கும்.' -
சிவகாமிநாதன் இதற்குப் பதில் கூறவில்லை. அவர்கள் விருட்டென்று வெளியேறினார்கள். அன்று இரவு முத்து ராமலிங்கமும் பிறரும் சுவரொட்டிகள் ஒட்டும் போதே, சில எதிர்ப்புக்களும், சில்லறைத் தகராறுகளும் உண்
டாயின. - -
அவர்கள் மறுநாள் மாலை ப்ொதுக் கூட்டத்திலும் தகராறுகளை எதிர்பார்த்தார்கள். ஆனால் கூட்டம் அவர் களுக்கு ஆதரவான வகையில் பெரிய அளவு கூடி
விருந்தது. . -
கடல்போல் பெரிய அந்தக் கூட்டத்தில் யாராவது கலகத்துக்கு வந்தால், மக்களே அவர்களைச் சூறையாடி விடுவார்கள் போல் தோன்றியது. - -
கூட்டத் தொடக்கத்தில் சில இளைஞர்கள் பேசி னார்கள். * - -
அப்போது க்ட அமைதியான முறையில் மக்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். மங்கா-பேசுவதாக அறிவித்து அவளைக் கூட்டத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார் சிவகாமிநாதன்.
அவள் ஆவேசமாகப் பேச ஆரம்பித்த சில கணங்களில், "டாய் துரோகியோட மகளெப் பேசவிடாதே" என்று. கத்தியபடி சோடாப் புட்டியோடு ஆவேசமாகப் பாய்ந் தான் ஒரு முரட்டு ஆள். அதே போன்ற குரலோடு வேறு சிலரும் கிளம்பின்ார்கள். கூட்டத்துக்கும் சி வ க மி நாதனுக்கும் அப்படிக் கிளம்பியவர்கள் தங்களுக்கு ஆதர வாளர்களா எதிரிகளா என்று புரிந்து கொள்ள முடியாமல் குழப்பம் ஏற்பட்டது. - - - - -