176 திசப்த சங்கீதம்
கும்பல் தப்பி ஓடியிருந்தது. காத்திருந்த கூட்டத்திற்குச் சிவகாமிநாதன் பேசினார்.
எல்லாப் பக்கங்களிலும் நெடுந்தொலைவுக்கு ஒலி பெருக்கியைக் கட்டியிருந்ததால் மருத்துவ மனையிலிருந்த டியே முத்துராமலிங்கமும் மற்றவர்களும்கூட அதைக் கேட்க முடிந்தது. . . -
மங்காவை அவள் தந்தைக்கு எதிராகப் பேசவிடாதபடி தடுக்கவே அத்தனை தந்திரமான கலக ஏற்பாடு என்பது அதற்குள் பலருக்குப் புரிந்திருந்தது,
'இப்படி ஆயிரம் கலகங்களும் கலகக்காரர்களும் வந்தாலும் நானும் எனது இயக்கமும் ஒடுங்கி ஓய்ந்துவிட மாட்டோம். நரித்தனமும் வஞ்சகமும் வேஷம் போடு வதும் எனக்குத் தெரியாதவை. ஆதரவோ எதிர்ப்போ எதானாலும் நேராகவும் நேர்மையாகவும் வர வேண்டு மென்று நினைக்கிறவன் நான். பொதுவாழ்வில் வஞ்சக வேடங்கள் கூடாது. பச்சை மண் குடத்தில் அது காய்ந்து குடமாவதற்கு முன் தண்ணிர் நிரப்பி வைத்தால் அது கரைந்து விடும். உருத் தெரியாமல் சிதைந்து விடும். லஞ்ச ஊழல்களினால் பணம் சேர்த்துக் கொண்டு அரசியல் நடத்துவதும் அப்படித்தான். வேண்டியவர்களைப் போல் உள்ளே நுழைந்து கொண்டுகோஷங்கள் போட்டு வேண்டா தவர்களின் வேலைகளைச் செய்கிறீர்கள். என் அருமை மகனைப் போன்ற முத்துராமலிங்கத்தை மண்டையைப் பிளந்து மருத்துவமனையில் படுக்க வைத்துவிட்டீர்கள். அவரை இரத்தம் சிந்த வைத்துவிட்டீர்கள். இன்று இந்த மேடையில் அவர் சிந்திய இரத்தத்திற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். - . . . . -
அடியாட்கள் வைத்து அரசியல் நடத்தும் உங்களுக்கு
மந்திரிப் பதவி ஒரு கேடா?' என்று தொடங்கி விளாசி விட்டார் சிவகாமிநாதன்.