பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 17 7

கூட்டத்தின் முழு விவரங்களையும் முதலில் இருந்தே ஒரு சி. ஐ. டி. குறிப்பெடுத்துக் குறித்துக் கொண்டிருந்தார். தம்முடைய சொற்பொழிவு ஒரு வரி விடாமல் அப்படியே மந்திரிக்குப் போகும் என்பதும் அவருக்குத் தெரிந்துதான் இருந்தது. சோடா புட்டி கல்லெறிக்குப் பயந்து கூட்டம் நடத்த முடியாமல் போயிற்று என்று யாரும் சொல்லக் கூடாது என்பதற்காகவே முத்துராமலிங்கத்தையும் மற்றவர்களையும் மருத்துவமனையில் விட்டுவிட்டு அவர் வந்து தனியாகப் பேசிக் கூட்டத்தை நடந்தியிருந்தார்.

கட்டம் கலைந்து ஒலி பெருக்கி மேடை ஏற்பாட்டுக் காரர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு அவர் மீண்டும் மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்தபோது இரவு மணி பன்னிரண்டு. மண்டைக் காயத்தின் வலியினால் துரங்க முடி யாமல் தவித்த முத்துராமலிங்கத் துக்குத் தூக்க மருந்து கொடுத்து உறங்கச் செய்திருந்: தார்கள். . . . . . . . - மெளனமாகக் கண்ணிர் சிந்தியபடி அமர்ந்திருந்த மங்காவுக்குத் துணையாகச் சிவகாமிநாதனின் மகளும் அமர்ந்திருந்தாள். ; :- . . .

'நீ ஏம்மா அழுதுகிட்டிருக்கே...ஏதோ போறாத். வேளை. நடக்க வேண்டியது ந்டக்கலே.நடக்கக்கூடாதது நடந்திரிச்சு. அழுது என்ன ஆகப்போவுது? . . . . "எனக்குத் தெரியும் ஐயா! இன்னிக்கிக் கூட்டத்திலே நான் எங்கப்பாவை எதிர்த்துப் பேசுவேன்னு அறிவிக்க தாலேதான் இத்தினி கலாட்டாவும் வந்திச்சு. நான்தான் இத்தனைக்கும் காரணம்...'

"அசடே. இதெல்லாம் என்ன பேச்சு: கலாட்டாவுக்கும் எதிர்ப்புக்கும் பயந்தாப் பொதுவாழ்க்கையிலே எதுவுமே. செய்ய முடியாது. எல்லாம் எதிர் கொண்டு சமாளிச்சுத், தான் ஆகணும்.' ' ' ..." . . . - - - - -