உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 r . - நிசப்த சங்கீதம்

சேர்வையைப் பார்த்துவிட்டு வரலாம். ஏதாவது வழி பிறந்

தால் சரிதான்'-என்று தீர்மானம் செய்தான் அவன்.

சென்னைக்குப் போகவேண்டும். எப்படிப் போனால் என்ன? யாரோடு போனால் என்ன? எதில் போனால் என்ன? நூறு ரூபாய்க்குமேல் செலவாகவேண்டிய பயணம் இலவசமாகிறது. கைச்செலவுக்கு ஐயாவிடம் ஏதாவது கேட்டு வாங்கிக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்து கொண்டான் அவன். தமிழகத்தின் தலைநகரான சென் னைக்கு இதுதான் அவனது முதற் பயணம். இதுவரை வடக்கே திண்டுக்கல்லைக் கடந்து அதற்கப்பால் அவன் போக நேர்ந்ததே இல்லை. - t

2

மறுநாள் பிற்பகலிலிருந்தே சென்னைக்கு லாரிகள் புறப்படத் தொடங்கியிருந்தன. கட்சிக் கொடிகள், எந்த ஊரினுடைய கட்சிக் கிளையின் சார்பில் அந்த லாரி வருகிறது என்பதை விளம்பரப்படுத்தி அறிவிக்கும் துணி பேனர் ஆகியவை எல்லாம் ஒவ்வொரு லாரியிலும் தாராள மாகவும் பெரிதாகவும் கட்டப்பட்டிருந்தன.

லாரிகள் எல்லாம் தேனியிலிருந்து பெரிய குளம், வத்தலக் குண்டு, நிலக்கோட்டை, .ெ கா ைடரே ir டு, திண்டுக்கல் வழியாகச் சென்னை செல்லும் என்று அறிவிக்கப் பட்டிருந்ததினால் நண்பகலிலேயே முத்துராம

லிங்கமும், அவன் தந்தையும், தேனிக்குப் புறப்பட்டு வந்தி . ருந்தார்கள். * . . . .” ' ' . -

அங்கே லாரிகள் நிறுத்தப்பட்டிருந்த மைதானத்தில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. சொந்தச் செல வுக்கும், கைச்செலவுக்கும் பணம் இருந்தால் போதும். சென்னை போகவும் திரும்பவும் பயணம் ஒசி" என்று. அறிவிக்கப்பட்டிருந்ததால் லாரிகள் கொள்ள முடியாத