178 . . r நிசப்த சங்கீதம்
"என்னைப் பேசவிடாம்ல் பண்ணனும்கிறதுக்காக இப்படிக் கலாட்டாப் பண்ணி இவர் மண்டையை உடைச்சுட்டாங்களே பாவிகள்.'
'என்ன செய்வது? ஒவ்வொரு தர்மயுத்தத்திலும் முதலில் அதர்மம்தான் ஜெயிப்பதுபோல் தோன்றும்... தர்மவான்கள்தான் சிரமப்படுவார்கள். பொறுத்திருந்து தான் ஜெயிக்கனும்! அதான் சோதன்ை நிறைய வரும்னு முதல்வியே சொன்னேனே." - . . . .
எல்லாம் எங்கப்பா ஏற்பாடாத்தான் இருக்கும்! இந்த மாதிரிக் காரியத்துக்காக ஆயிரம் இரண்டாயிரம் செலவழிக்கக்கூடத் தயங்க மாட்டாரு அவரு." -
'முதல்லே எனக்குக்கூடப் புரியல்லே. 画。 நிம்ம மேடையிலே பேசறதை எதிர்த்து எங்க ஆளுங்கதான் அடிப்பாடு போடறாங்களோன்னு சந்தேகப்பட்டேன். அப்புறம்தான் விஷயமே புரிஞ்சுது, எங்களைப் பத்தியோ எங்க பேச்சைப் பத்தியோ உங்கப்பா கவலைப்படலே. நீ இந்த மேடையிலே அவரைப் பத்திப் பேசறதை மட்டும் அவர் விரும்பலே, அதைத் தடுக்கத்தான் எல்லா ஏற்பாடும்னு புரிந்தது. நாங்க் எப்பவும் போல வழக்கமா அவரை எதிர்த்துத்தான் பேசுவோம். ஆனா நீ பேசினா அவரோட சொந்த மகளே பேசறப்ப நிஜமாத்தான் இருக்கணும்னு ஜனங்க தன்னைப்பத்தி வெறுக்க ஆரம்பிச் சுடுவாங்களோன்னு பயப்படறாரு. அதான் இப்படிக் கலாட்டாவுக்கு ஏற்பாடு பண்ணிக் கூட்டத்தையே கலைக்கறாரு...'
"இப்படி எத்தனை நாளைக்கிக் கலாட்டாப் பண்ணியே சமாளிச்சிட முடியும்?" -
பணமும், பதவியும் இருக்கிற வரை முடியும். பேர்லீஸ்கர்ரங்க பதவி இருக்கறவரை அவரு சொன்னபடி கேட்பாங்க...' - -