26
க1லைப் பத்திரிகையைப் படித்துவிட்டு-விசாரித்து விவரம் தெரிந்துகொண்டு அறை நண்பர் சண்முகம் அவனைப் பார்ப்பதற்குத் தேடி வந்திருந்தார். அவர்ை மற்றவர்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தினான் முத்துராம் லிங்கம். தியாகி சிவகாமிநாதன் அநியாயமாகக் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்த முத்துராமலிங்கத்தைத் தடுத்து நிறுத்தி அமைதியும் நிதானமும் அடையச் செய்ததே சண்முகம் தான் இல்லாவிட்டால் மங்காவோ சிவகாமிநாதனின் மகளோ அப்போது அவனைத் தடுத்து நிறுத்தியிருக்க இயலாமற் போயிருக்கும். - - - . "அவரைக் கவனிச்சுக்க ஆளுங்க இருக்காங்க தொண் டருங்க கொஞ்சமா, நஞ்சமா? நீ மண்டையை உடைச்சுக் கிட்டுப் படுக்கையிலே கிடக்கிறவன் போயி என்னப்பா, பண்ண முடியும்? அவரை ஜெயில்லே போயி விசாரிச்சுக் கிறதுக்கோ, ஜாமீன்ல எடுக்கிறதுக்கோ ஏற்பாடு பண்ணு வாங்க-நீ கவலைப்படாதே." - - -
"நடக்கிற அநியாயங்களையும் அக்கிரமங்களையும் பார்த்து என் நெஞ்சு கொதிக்குதுப்பா? கேள்வி முறை இல்லாமப் போச்சே. இதென்ன மனுஷங்க வாழற நாடா இல்லே காடா...' - -
சிரங்கு கூட நல்லாப் பழுத்து முத்தினப் பெறவு தாம்ப்பா ஒடையும் நம்ம சமூகமும் ஆட்சியும் அரசியலும். எல்லாம் இப்ப சிரங்கு மாதிரியும் புண்ணு மாதிரியும். உள்ளே சீழ் வச்சுப் பழுத்திருக்கு, உடையனும். உடைய வேண்டியதுதான் மீதம். எப்ப உடையும்னு தான் தெரி: யலே முத்துராமலிங்கம்! . * ,
'புரையோடிப் போய் அழுகாமல் அது உடையனும். இன்று முதல் தரமான மனிதனுக்கும், முதல் தரமான
நி-12 -