உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நிசப்த சங்கீதம்

எதிரிக்கும் போட்டி இல்லை இங்கே! பொது வாழ்க்கை யிலே சகல துறைகளிலேயும் முதல் தரமான மனிதர்களுட னும் நான்காந்தரமான எண்ணங்களுடனும் மோதிச் சமாளிக்க வேண்டிய துரதிர்ஷடமான நிலையிலே இருக். கிறோம். அப்பழுக்கில்லாத சிவகாமிநாதன் போன்ற உத்த மர்கள். தியாகிகள் அறிவாளிகள் எல்லாம் ரெளடிகளிடமும் பிம்ப்களிடமும் பணத்துக்காகவும், சுய நலத்துக்காகவும், எதையும் செய்யத் தயாராயிருக்கும் மட்டமான மனிதர் களிடத்தில் எதிர்த்துப் போரிட வேண்டியிருக்கிறது."

"செய்யறதையும் செஞ்சுப்புட்டு அமைதியை நாடும் அவதார புருஷர் மாதிரிக் காலம்பரப் பேப்பர்லே அறிக்கை வேற விட்டுப் புட்டாரு...'

"யாரைச் சொல்றீங்க...?’, 'மந்திரியைத்தான்! கருத்து வேறுபாட்டைத் தெரி விக்க கூட்டங்களில் வன்முறையை மேற்கொள்ளக் கூடாது. நேற்று இரவு தியாகி சிவகாமிநாதனின் பொதுக் கூட்டத் தில் புகுந்து கலவரம் நிகழ்த்திய காலிகளை வன்மையாகக் கண்டிக்கிறே'ன்னு அவரே ஒரு அறிக்கையும் விட்டி ருக்காரே - .

பார்க்கவியே...?" * - - * அந்த மாதிரி மந்திரி நாதனின் அறிக்கை வெளியாகி யிருந்த அவர் சார்புக் கட்சிப் பத்திரிகை ஒன்றை ஆள் அனுப்பி வாங்கி வரச் செய்து முத்துராமலிங்கத்திடம் காண்பித்தார் சண்முகம், - - -

'குழியைப் பறிச்சது மில்லாமே குப்புறத் தள்ளியும் விட்ட கதையாவில்லே இருக்கு? இப்படிப் புத்தர் வேஷம் வேற போடணுமா?" - * . .

"வேஷம் போடறதுங்கறது இன்னிக்கு அரசியல்லே அன்றாடத் தொழிலாவே போயி ரிச்சுப்பா! மிகத்திறமையா வேஷம் போடறவங்க நடிக்கிறவங்க எல்லாருமே இன்னிக்கு அரசியலுக்குள்ளே வந்திருக்காங்க. இத்தனை வேஷதாரிங்