பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 183

களுக்கு நடுவே உன் குருநாதர் தினர்ரத்துக்குக் காரணம்

இப்பப் புரியுதில்லே?" - - "சண்முகம் இப்படிக் கேட்டது நியாயமென்றே பட்டது முத்துராமலிங்கத்துக்கு. பொது மக்களுக்கும் சமூகத்துக்கும் காண்பித்துப் புகழ் பெற ஒரு கருணை வடி வான புத்தர் முகமும் அந்தரங்க வாழ்வுக்கும், நடை முறைக்கும் கடை வாய்ப் பற்கள் முளைத்த, கோர ராட்சஸ் முகமுமாக வாழ்வது என்பது இன்றைக்கு மிகவும் சகஜமாகப் போயிருக்கும் ஒன்று என்பது புரிந்தது. சண்முகம் நடுநடுவே மந்திரி எஸ். கே. சி. நாதனின் சொந்த மகளான மங்காவைப் பார்த்து, "நான் சொல்றேனேன்னு நீங்க தப்பா நெனைச்சுக்காதீங்க உள்ளதைத் தான் சொல் றேன்!" என்று தயங்கிய தொனியில் கூறியது அவளுக்கே பிடிக்கவில்லை. . . . .

"இதிலே எனக்கு வருத்தம் இல்லீங்க! எங்கப்பாவைப் பத்தி எனக்குத் தெரியாத எதையும் நீங்க சொல்லிடலே! எல்லாம் உள்ளதை உள்ளபடியே தான் சொல்lங்க... கசப்பா இருக்குங்கிறதாலே உண்மை பொய்யாயிடாது. இந்த உண்மையை எல்லாம் நானே ப்கிரங்கமாகப் பேசி அவரைக் குற்றம் சாட்டத் தயார்னு தானே நேத்து மேடை யேறினேன். அதுக்காகத்தானே இத்தினி கலாட்டாவும் நடந்திச்சு?'

உங்க தைரியத்தைப் பாராட்டறேன்: ஒவ்வொரு சமூக விரோதியோட குடும்பத்திலேருந்தும் இப்பிடி

ஒருத்தர் துணிஞ்சு கிளம்பி முன் வந்தா நாட்டை ம்ாத்திப் பிடலாம்.' * . . . .

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே அந்த நர்ஸிங் ஹோமின் டாக்டர் வந்தார். முத்துராம லிங்கத்தைப் பார்த்தார். பரிசோதித்தார். மனந்திறந்து பேசினார். . . . . . . . * -

'வப்ளிக் செர்விஸ் பொதுப்பணி அது இதெல்லாங் எத்தினி அபாயகரமானதா ஆயிடிச்சுப் பாருங்க...நீங்க,