உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 நிசப்த சங்கீதம்

ச்ாலைக்குச் சென்றார். முத்துராமலிங்கம், சண்முகம், மங்கா, சிவகாமிநாதனின் மகள் மகன் ஆகியோருடன் டாக்டர் சென்றிருந்தார். -

சிறையில் அவருக்கு உரிய வகுப்புக் கொடுக்கப்பட. வில்லை. அரசியல் காரணமாகக் கைதானவர்களுக்குக் கொடுக்கப்படும்-வசதிகளும் செய்து தரப்படவில்லை. கேடி கள். திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் ஆகிய ரகத்தினரோடு சிவகாமிநாதனும் அடைக்கப்பட். டிருந்தார். முத்துராமலிங்கத்தைக் கனிவாக விசாரித்தார் அவர்.

"இந்த மண்டைக் கட்டோட நீ ஏன்ப்பா வந்தே ரெஸ்ட் எடுத்துக்கொள்ளக் கூடாதா?’

"உங்களைப் பார்க்காம இருக்க முடியாதுன்னு: தோணிச்சு. வந்தேன்.'

"நான் எங்கே போறேன்?...நீ உடம்பைக் கவனிச்

சுக்கப்பா...டாக்டரிட்ட எல்லாம் சொல்லியிருக்கேன்

பார்த்துக்குவாரு தியாகியின் குரல் ஒரு இஷ்யூ கூட. நிக்கப்பிடாது! பயந்து நிறுத்திட்டோம்னு ஆயிடும்.'

"அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்...நீங்க கவலை யில்லாம இருக்கலாம்"...என்று மங்காவும், அவருடைய மகனும், மகளும் முந்திக் கொண்டு உறுதி கூறினார்கள். சண்முகம் வந்ததற்காக அவரிடம் நன்றி சொல்லிப் பாராட். டினார் சிவகாமிநாதன். டாக்டர் அவரை ஜாமீனில் விடுவிப் பதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கப் புறப்பட்டபோது. 'எனக்கு அவசரம் ஒன்றுமில்லை! என்னைக்கைது செய்தது. பச்சை அயோக்கித்தனம். பழி வாங்கும் செயல் தவிர இது வேறு ஒன்றும் இல்லை என்று பொதுமக்களுக்குப் புரிய: வைப்பதற்காகவாவது நான் இன்னும் கொஞ்ச நாள்.

ஜெயிலேயே இருந்துடலாம்னு நெனைக்கிறேன்-என்றார். சிவக்ாமிநாதன். - - • .

to