பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 187

'உங்களுக்குக் குடுக்கவேண்டிய கிளானைக் குடுக்காம இப்படிக் கொலைகாரங்களோடவும் கொள்ளைக்காரங்க ளோடவும் போட்டிருக்காங்களே?'

வெளியிலே இல்லாத கொலைகாரங்களும் கொள் ளைக்காரங்களுமா உள்ளே இருந்துடப் போறாங்க? அவங்களோடவே சேர்ந்து வாழறதைத் தவிர்க்க முடியா தப்போ. இவங்களோட சேர்ந்து வாழறது மட்டும் எந்த விதத்தில் கேவலம்?'

சிரித்துகொண்டேதான் இப்படிக் கேட்டார் சிவகாமி நாதன். கண்கலங்க நின்று கொண்டிருந்த மங்காவைப் பார்த்துத் தனியாக அவளுக்கென்றே அவர் பேசினார்.

தைரியமா இரும்மா தர்மபுத்தத்திலே இறங்கி யாச்சு...ஜெயிக்கிற வரை இனிமேல் போராட்டம்தான்... இதில் புறப் போராட்டத்தைவிட மனப்போராட்டம்தான் அதிகமாயிருக்கும்...' ‘. . . - என்னாலே உங்களுக்குப் புதுப்புதுச் சங்கடங்களும், கஷ்டங்களும் வர்ரதைப் பார்த்துத்தான் மனசுக்கு வேதனை யாயிருக்கு.' ... - -

மனசை உறுதியா வச்சுக்கப் பழக்கு அம்மா! எல்லாம் சரியாகும். நமக்கு வேண்டாதவர்களிலுள்ள அயோக்கியர். களை எதிர்க்கிறது எல்லாராலேயும் எங்கேயும் முடியற காரியம்தான். நமக்கு ரொம்ப வேண்டியவர்களிலுள்ள அயோக்கியர்களை எதிர்க்கத்த்ான் அபாரமான மனோ. தைரியம் வேண்டும். கீதையின் சாரமே அப்படி எதிர்ப்புத் தான்.' - , - - . . - நேரமாகி விட்டது என்று சிறை அதிகாரி வந்து அவசரப்படுத்தினார். அவர்கள் அவரிடம் சொல்லிப்பிரிய மனமில்லாமல் விடைபெற்றுக் கொண்டு பிரிந்து வெளியே வந்தார்கள். வெளியே சென்ட்ரல் ஸ்டேஷன் என்ற முகத் துவாரத்தில் ஜன ஊற்றுப் பெருகிப்பிரவாகமாகப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. -