பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 191

அவள் மேஜரான பெண் என்பதால் அதைக் கைவிட்டு விட்டு இப்படி எதிர்ப்பு முயற்சிகளில் தந்தை இறங்கியிருக்

கிறார் என்பது நம்பகமான உள் மனிதர்கள்மூலம் மங்கா

வுக்குத் தெரிந்தது. அவள் உறுதியாயிருந்தாள். தந்தை

அழுக்கடைந்து நாறிக் கொண்டிருக்கிற முடைநாற்ற அரசியலை அவள் மனப்பூர்வமாகவே வெறுக்கத் தொடங்கி

யிருந்தாள். அவரையும் அவரது முறைகேடுகளையும்,

ஊழல்களையும் நினைத்தாலே அவளுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. -

பொதுக்கூட்டத்தில் கலவரம் காரணமாகப்பேச இயலாமற்போன கருத்துக்கள்ைத் தியாகியின் குரவில் தொடர்ந்து எழுதத் தொடங்கியிருந்தாள் மங்கா. "ஊழலின் உதாரண புருஷர்கள்' என்று அந்தக் கட்டுரைத் தொடருக்குத் தலைப்பு இடப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரைத் தொடர் ஆரம்பமான அந்த இதழ் தியாகியின் குரல் பிரதிகள் எல்லாவற்றையும் ஆட்களையும் போலீலை யும் விட்டே விலைக்கு வாங்கிவிட்டார் எஸ். கே. சி. நாதன். - -

மந்திரியின் கூட்டம் நடைபெற இருந்த தினத்தன்று காலை யாரும் எதிர்பாராத விதமாக்க் கண்மணி முத்துராம லிங்கத்தைத் தேடி வந்து சேர்ந்தாள். அவளோட ஒரு பெரிய கும்பலே கூட வந்தது. சின்னிகூட அதில் இருந் தான். கசாப்புக்கடைக்காரர்கள் இராமலிங்க வள்ளல்ார் மன்றத்தைத் தேடிவந்த மாதிரி அந்தக் கூட்டம் சிவகாமி நாதனின் வீட்டைத்தேடி வந்திருப்பதைக் கண்டு சுற்றுப் புறம் ஆச்சரியத்தில் மூழ்கியது. தாக்க வந்திருக்கிறார் களோ என்றுகூடச் சிலருக்குச் சந்தேகமாக இருந்தது.

"அண்ணே, பத்திரிகையிலே சங்கதி பாத்ததிலேருத்து. மனசு பதறிப்போச்சு எந்தப் பாவி இப்பிடிப் பண்ணி" னான்'-என்ற ஆறுதல் வினாவோடு அவனை அணுகினாள் கண்மணி, . - -