192 நிசப்த சங்கீதம்
வேற யாரு? எல்லாம் உங்க கட்சிக்காரங்கதான்! அடி :உதை, கலாட்டா, கல்லெறி சோடா புட்டி வீச்சு, எல்லாத் தையுமே தேசிய நாகரிகங்களாக்கினதே உங்க கட்சி தானே?" r . . . . . - "அப்பிடியா சொல் lங்க? நான் வேற மாதிரியில்லே கேள்விப்பட்டேன்? உங்கமேடையிலே எங்க கட்சி மந்திரி யோட பொண்ணு பேசறேன்னு முன் வந்ததாலே உங்க தொண்டருங்களே கொதிப்படைஞ்சு ஆத்திரத்திலே எதிர்த்துக் க ல ா ட் ட ா ப் பண்ணிட்டாங்கன்னிலே இசான்னாக...?’’ - -
இதைக்கேட்டு இன்னும் யாரென்று அறிமுகமாகாமல் அருகே நின்று கொண்டிருந்த மங்கா கண்மணியை முறைத்துப் பார்த்தாள், கண்மணியின் சிரிப்பும், கண்ண சைப்பும், விட்டுத் தெரிந்த கவர்ச்சிகளும், முத்துராம லிங்கத்திடம் அவள் காட்டிய அந்நியோந்நியமும் ஏற்கெனவே மங்காவுக்கு எரிச்சலூட்டியிருந்தன. பரஸ்பரம் ஏற்பட்டுவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடுமை களைத் தவிர்ப்பதற்காக உடனே இருவரையும் ஒருவருக் கொருவர் அறிமுகம் செய்து வைத்தான் முத்துராம லிங்கம். * . - - -
உங்க பேருதான் கண்மணிங்கறதா? நீங்க இன்னிக்கு சாயங்காலம் எங்களை எதிர்த்துக் கூட்டத்திலே பேசப் போlங்கன்னு போஸ்டர் அடிசிசு ஒட்டியிருக்காங்களே?'.
"ஆமா தங்கச்சி! நானேதான். அரசியல் ரீதியா நான் அண்ணனுக்கு எதிர்ப்பக்கத்திலே இருக்கேன்.ஆனாலும் தனிப்பட்ட முறையில் அண்ணன் நம்ம ஏரியா ஆளுங்கற தாலே ஒரு இது உண்டு.
-அந்த இதுவுக்கு என்ன அர்த்தம் என்று புரிந்து கொள்ள மங்கா மனதிற்குள் தீவிரமாக முயன்று கொண் டிருந்தாள்.
"அண்ணனைப் பார்க்க இங்கே தேடி வந்திருக்கேன்னு என்னோட கட்சி விசுவாசத்தைப் பத்தித் தப்புக் கணக்குப்