பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 94 - - நிசப்த சங்கீதம்

உபயோகப்படுத்தும் சொற்கள், மொழி நடை ஆகிய வற்றின் தராதரம் முற்றிலும் மரத்துப் போகிற அளவிற்கு அவர்கள் பேசு முன் சாராயத்தில் மூழ்கி முக்குளித்து எழுந்து வந்திருந்தார்கள் போலிருக்கிறது.

முத்துராமலிங்கத்தையும், தியாகியின் மகளையும் சம்பந்தப்படுத்தித் தாறுமாறாகப் பேசினார்கள். வீட்டி லிருந்தபடியே கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் எரிச்சலாயிருந்தது. தியாகி சிவகாமிநாதனின் குடும்ப விஷயங்களைக் கொச்சைப்படுத்திப் பேச்சுக்கள் தொடர்ந் தன. - - . . . - -

"அண்ண்ே, வாங்க போய் எலும்பை நொறுக்கிப் போட்டு வரலாம்' என்று கொதித்துச் சண்முகத்தையும் அழைத்தபடி எழுத்தான் முத்துராமலிங்கம்.

- "பொறு தம்பீ. பதறாதே! தெரு நாய்களும், சொறி நாய்களும் குறைப்பதற்கு அஞ்சிச் சூரியன் அஸ்தமித்து விடுவதில்லை' என்று அப்போது அவனைத் தடுத்து . உட்கார வைத்தார் சிவகாமிநாதன்.

28

மேலும் அந்தப் பேச்சுக்களைக் கேட்டபடியே அங்கேயே தொடர்ந்து இருந்தால் முத்துராமலிங்கம் பொறுமை இழக்கக்கூடும் என்று அநுமானித்த சிவகாமி நாதன் அவனையும் மங்காவையும், சண்முகத்தையும் கடற் கரைக்குப் போய்க் காற்றாட உட்கார்ந்து பேசிவிட்டு வரலாம் என்று அழைத்துச் சென்றார். அவர்கள் ஒரு

டாக்ஸியில் கடற்கரைக்குச் சென்றார்கள்.

அரசியல்லேயும், பொது வாழ்விலேயும் ஈடுபட்டிருக் கிறவர்களுக்கு அந்தரங்க சுத்தி இல்லே. பத்துப் பேரை கூட்டி வச்சுக்கிட்டு நடுத்தெருவிலே வித்தை காட்டற பாம்பாட்டிங்க மாதிரிதான் கட்சித் தலைவருங்களும் கட்சிக் கூட்டங்களும் ஆயிடிச்சுப்பா. இந்த அரசியல்