பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 195

பாம்பாட்டிங்க பேசறது. செய்யிறது எல்லாத்தையும் பார்க்கறப்ப நமக்கு அருவருப்பா இருக்கு-கோபம் வருதுஆனாலும் பொறுத்துக்கத்தான் வேண்டியிருக்கு' என்று வருந்தினார் சிவகாமிநாதன். முத்துராமலிங்கம் அதற்கு மறுமொழி கூறினான் :

"அதுக்காக் நாக்கிலே நரம்பில்லாமே எதை வேணு மானாலும் பேசறதா? கேள்வி முறையே இல்லியா?" -

"நாக்கிலே நரம்பில்லாமே-வாக்கிலே வரம்பில்லாமே -எதை வேணாலும் எப்படி வேணாலும் பேசறதே ஒரு கலையா வளர்ந்துக்கிட்டிருக்கே இன்னிக்கி' என்று சண்முகம் முத்துராமலிங்கத்தை நோக்கி எதிர்க் கேள்வி போட்டார். மங்கா சுடச்சுடச் சொன்னாள் :

"மந்திரீன்னு பேரையும் வச்சுக்கிட்டு வெக்கமில்லாமே மேடையிலே உட்கார்ந்து இதையெல்லாம் ரசிச்சுக்கிட்டிருக் காங்களே, அதைச் சொல்லணும்?' * -

"யாரை உங்கப்பாவைத்தானே சொல்றே?" -

'அவரைத்தான்! வேற யாரை?' என்று சிரித்தபடியே முத்துராமலிங்கத்துக்கு மறுமொழி கூறினாள் மங்கா. அவனும் பதிலுக்கு நகைத்தான்.

அவர்கள் கடற்கரையில் உழைப்பாளிகள் சிலை அருகே கீழிறங்கி மணற்பரப்பில் நடந்தனர். சண்முகம் அலையருகே போய் நிற்பத்ற்கு எண்ணிக் கடலை நோக்கி நடந்தார். மங்காவும் முத்துராமலிங்கமும் சிவகாமி தாதனும் மணற்பரப்பில் அமர்ந்தார்கள். சிவகாமிநாதன் தான் முதலில் தொடங்கினார். -

'அந்தக் கூட்டம் முடிஞ்சப்புற்ம் நாம வீடு திரும் பினாப் போதும் அதுவரை அங்கே இருக்கறது நல்லதில்லே. உங்கப்பா உன் மேலேயும் எங்க மேலேயும் ரொம்ப ஆத்திர த்தோட இருக்காரு. நீ மேஜரான பொண்ணுங்கற தாலே சட்டப்படி உன்னை ஒண்னும் செய்ய முடியலே. அதுனாலே கும்பலா வந்து தாக்கலாம். உன்னைக் காரிலே