நா. பார்த்தசாரதி I 97
தங்கிடிச்சு. நா வேணா பர்மிங்ஹாம் அண்ணனுக்கு ஒடு கேபிள் குடுத்து இப்ப வரவழைக்கட்டா? -
"செய்யலாம் அம்மா! ஆனா அதுக்கு எப்பிடியும் பத்துப் பதினைஞ்சு நாள் ஆகும். இப்ப உடனடியாக தாம ஒரு ஏற்பாடு பண்ணிப் பாதுகாப்புத் தேடியாகணும்." 'நீங்க என்ன சொன்னாலும் அதுக்கு நான் கட்டும் படுவேன் ஐயா" என்றாள் மங்கா. முத்துராமலிங்கமும் அதையே சொன்னான். அவர் தொடர்ந்தார்,
தயவு செய்து உங்களுக்காக ஒரு நியாயமான Lifrgi காப்புக்காக நான் கவலைப்படறேன்னு ம ட் டு ம் புரிஞ்சுக்குங்க. பயப்படறேன்னு நெனைக்காதீங்க. தைரியம் வீரம், துணிவு எல்லாத்துக்கும் ஏதோ ஒரு விதத்திலே சரி யான அடிப்படை நியாயம் இருக்கணும்னு நெனைக்கறவன் நான், இப்ப நான் சொல்லப் போறதை அந்த அடிப்படை யிலே தான் நீங்க எடுத்துக்கணும். - ,
- அடிப்படையில் நியாயமில்லாத ை த if وفا مع به ஆனிலும், வீரமும் யாருக்கு இருந்தாலும் அது சரியில்ல்ை இந்தத் தர்ம புத்தத்தை நாம் தொடர்ந்து நடத்ஓ யாகணும்னா அதுக்கு முதல்லே நம்மைத் தயார் செய்து கொள்ள வேணும். இப்பிடி உதிரி உதிரியாத் தணிச்சு நின்னு போராடறப்ப வீண் பழிகளும், அபவாதமும் வரத் - தான் வரும். நான் சொல்றதை நீங்க ரெண்டு பேரும் தப்பா நினைக்கலேன்னு நம்பித்தான் இதைச் சொல்றேன். உங்க சிநேகிதத்தை அல்லது நெருக்கத்தை நீங்க ஏன் சட்ட பூர்வமானதாக்கிக் கொள்ளக்கூடாது? அப்படிப் பண்ணிக் கிட்டா நாம் இன்னும் நிமிர்ந்து நின்னு போராடலாம். உங்களுக்குச் சம்மதமானா நானே தல்ைமை வகிச்சு உங்க திருமணத்தை நடத்தி வைக்கிறேன்."
இதைக் கேட்டு மங்கா நாணித் தலைகுனிந்தாள். முத்துராமலிங்கம் அவளை மெளனமாகப் பார்த்தான். அவன் அவளுடைய மறுமொழியை எதிர்பார்க்கிறான் என்று தெரிந்தது. -
நி-13