1 98 நிசப்த சங்கீதம்
“s; சொல்லும்மா முதல்லே. இதிலே உன் பதி ல்தான் எனக்கு முக்கியம்!' -
"நீங்க சொல்றதிலே எனக்கு முழுச்சம்மதம் ஐயா!' என்று அவள் பதில் சொல்லியபோது வார்த்தைகள் மகிழ்ச்சி நிறைவில் தடுமாறின. . -
எங்கேயாவது ஆடம்பரமில்லாமே ஒரு கோவில்லே தாலியைக் கட்ட ஏற்பாடு பண்ணுவோம். அப்புறம் - திருமணத்தைச் சட்டப்படி பதிவும் பண்ணிடலாம்! அவங்க இதைக் கொச்சைப்படுத்தியோ, கேவலப்படுத்தியோ பேசறத்துக்குள்ள நாம இப்படி நியாயப்படுத்திக்கலாம். மங்கா மேஜரான பொண்ணு! நீயும் மேஜரான பையன்! இந்த ஏற்பாட்டுக்கு அப்புறம் உங்களைப் பிரிக்கவோ, அவதூறு பேசவோ அவங்க முயற்சி பண்ணினாச் சட்டமும், முறைகளும் உங்களுக்கு ஆதரவா இருக்குமே ஒழிய அவங் களுக்கு ஆதரவா இருக்காது!’ - - ஒரு போராட்டத்துக்கு முன் தம்மைத் திட்டமிட்டுத் தயாரித்துக் கொள்ளும் முன்னேற்பாடும் ஒழுங்குமே அவர் பேச்சில் தொனிப்பதை முத்துராமலிங்கம் கவனித்தான்.
ஆளும் கட்சி, போலீஸ், பணபலம், பதவிச் செல்வாக்கு எல்லாம் உள்ள ஒரு வலுவான முரட்டு எதிரியுடன் போரிடத் தொடங்குமுன் இந்த ஆயத்தம் அவசியம்தான். என்று அவனுக்கும் தோன்றியது. அவரே அவனை மேலும் கேட்டார் : . - - - -
'தம்பீ! இது விஷயமா நீ உன் பெற்றோரிடம் கலந்து பேச வேண்டிய அவசியம் உண்டா?' - இல்லே! அவங்களுக்கு இதைப் புரியவைக்கறதே கஷ்டம்! அதுனலே என் தந்தை ஸ்தானத்திலே இருந்து இதைச் செய்யிற பொறுப்பை உங்ககிட்டயே விட்டுட்றேன்
ஐயா!' . . . . . . . - - -
முத்துராமலிங்கம் இதை மனப்பூர்வமாகவே கூறினான். அவர் எடுத்துக்காட்டிய சூழ்நிலையின் அவசரமும் அபாய