நா.பார்த்தசாரதி - 203
லேய்ே பக்கத்துத் தெருவில்தான் இருந்தது. சிவகாமி நாதன் அவரைத் தடுத்துப் பார்த்தார். -
ஏன் வம்பை விலைக்கு வாங்குகிறீர்கள்? என் அச்சகத்துக்கு ஏற்பட்ட கதி உங்கள் அச்சகத்துக்கு ஏற்பட வேண்டாமே என்று பார்த்தேன்?"
"'உங்களுக்கு உதவுவதால் எனக்கு அப்படி நேரும், என்றால் அதை என் பாக்கியமாகக் கருதுவேன்.'"
அவருடைய உறுதிமொழியைக் கேட்டுச் சிவகாமிநாத னுக்கு ஆறுதலாக இருந்தது. அவரது அச்சகத்தின் அன்பர் களும், தொண்டர்களும் சேதங்களைச் சரிசெய்து கொடுக்க விரைந்து முன் வந்தனர். - .
பாதிக் கிணறு தாண்டிய நிலையில் இப்படி எவ்வளவு நாள் தொல்லைப்படுவது என்று சிந்தித்துச் சிந்தித்துக் குழம்பியபின் மங்கா முத்துராமலிங்கம் திருமணத்தைத் துரிதப்படுத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று சிவகாமிநாதனுக்குத் தோன்றியது. வெளியே செய்தியைப் பரவ விடுவதால் மங்காவின் தந்தையிடமிருந்து வரும் புதிய அபாயங்களைக் கருத்தில் கொண்டு இரகசியமாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்தார்கள். . . ஏதாவது கோயிலில் திருமணத்தை முடித்துக் கொண்டு உடனே பதிவும் செய்துவிட முன்னேற்பாடு நடந்தது. சண்முகமும், சிவகாமிநாதனும், மங்காவும், முத்துராம. லிங்கமும் மட்டுமே விவரம் அறிந்திருந்தனர். மந்திரி எஸ். கே. சி. நாதன் மந்திரியாக நடந்து கொள்ளவில்லை. பதவியிலுள்ள ஒரு ரெளடியாகவே நடந்து கொண்டார். எல்லாக் கலவரங்களையும், எல்லாச் சேதங்களையும் திட்ட மிட்டுச் செய்தபின் காலைப் பத்திரிகையில் கொள்கை களைத்தான் எதிர்த்துப் போராட வேண்டுமே ஒழிய நபர் களை எதிர்த்துப் போரிடக் கூடாது. பழம்பெரும் தியாகி யும், பத்திரிகையான்ருமான சிவ காமி நாத னின் அச்சகத்தைக் காலிகள் தீவைத்துத் தாக்கியிருப்பதை