உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 - . நிசப்த சங்கீதம்

வன்மையாகக் கண்டிக்கிறேன்! இப்படிப்பட்ட செயல் களை நாகரிக உலகம் மன்னிக்காது'- என்று புத்தரின் மறு அவதாரம் போல மறு நாள் மந்திரி எஸ். கே. சி, நாதன் ஓர் அறிக்கையும் விட்டு விட்டார். இதைப் படித்ததும் நிகழ்ச்சிகளை நேரிலேயே பார்த்து உண்மை யைப் புரிந்து கொண்டிருந்தவர்களுக்குச் சிரிப்புத்தான் வந்தது. திருடியவனே, தன்னைத் தப்புவித்துக் கொள் வதற்கு ஒரு மார்க்கமாக, "ஐயோ திருடன் ! ஐயோ திருடன்!' என்று கூப்பாடு போட்டுக் கொண்டே திருடிய பொருளுடன் மெல்ல நழுவுவதைப்போல இருந்தது மந்திரி யின் அறிக்கை. - 'பயந்தோ, தளர்ந்தோ, தொடர்ந்து போராடு வதற்குச் சலிப்படைந்தோ, பாதி வழியில் திரும்பிப் போய் விடச் சிவகாமிநாதன் தயாராயில்லை. - - எதற்கும் ஒரு பாதுகாப்பு ஏற்பாடாக இருக்கட்டும் என்று திருமண நாளன்று உடல் வலிமையும், மன வலிமை யும் உள்ள தன் இயக்கத் தொண்டர்கள் இருபத்தைந்து பேரை அழைத்திருந்தார் சிவகாமிநாதன். அவர்களிடம் கூட திருமணம் என்பது தெரிவிக்கப்படவில்லை.

"நான் பொறுப்பேற்றுச் செய்யப் போகிற ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சிக்காக உங்களை எல்லாம் அழைக் கிறேன்' என்று மட்டுமே சிவகாமிநாதன் அவர்களிடம் கூறியிருந்தார். பல திருமணங்களில் திருவும் இல்லாமல் மணமும் இல்லாமல் அவை வெறும் பட்டுப்புடவை, நகை எக்ஸிபிஷனாக இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி இருக் கிறார் சிவகாமிநாதன். மேல்தட்டு இந்துக்களிடையேயும் அவர்களைப் பார்த்து அனாவசியமாகக் கடன் வாங்கிக் காப்பியடிக்கும் மற்றவர்களிடையேயும் திருமணம் என்பது ஒரு புதிய சமுதாய ஊதாரித்தனமாக நிகழ்ந்து வருவதைப் பலமுறை பகிரங்கமாகக் கண்டித்திருந்த அவர் மங்காமுத்து ராமலிங்கம் திருமணத்துக்கு மிக எளிய ஏற்பாடுகளையே செய்திருந்தார். முத்துராமலிங்கத்துக்கு ஒரு நாலு முழம்