உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நீசப்த சங்கீதம்

அசாதாரணமான எதிரிகளிடமிருந்து இவர்களைக் காக்கும்: கடமை உங்களுக்கும் எனக்கும் இருக்கிறது. என் அழைப்பை ஏற்று இந்தத் திருமணத்துக்கு வந்த உங்கள் அனைவருக்கும் - நன்றி.' - - -

அன்று காலையிலேயே பத்து மணிக்கு அவர்களுடைய திருமணப் பதிவும் முடிந்து விட்டது.

மாங்காட்டிலிருந்து பூவிருந்தவல்லி போய் அங்கே

சிவகாமிநாதனின் நண்பர் வீட்டில் எல்லாரும் எளிமையான திருமண விருந்து உண்டார்கள். சிறிது நேரம் ஒய்வு, எடுத்துக் கொண்டார்கள். - -

விருந்து ஒய்வு எல்லாம் முடிந்ததும். 'இன்னும் ஒரு வரோம் நீங்கள் சென்னையில் இருக்க வேண்டாம் என்பது. என் அபிப்ராய்ம். பெங்களுர் போய் நிம்மதியாக ஒரு வாரம் கழித்து விட்டு வாருங்கள். இங்கிருந்தே பஸ் ஏறி. விடலாம்' என்று யோசனை கூறித் தன் சொந்தச் சேமிப்பி லிருந்து தயாராக எடுத்து வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்தார் உதவிக்காமிராமேன் சண்முகம். சிவகாமிநாதனும் அதையே வற்புறுத்தினார். ஆனால் முத்து ராமலிங்கம் அதற்கு இணங்கவில்லை. அதை மறுத்துப்ப்ேசி அவர்களோடு வாதாடினான்.

30

- "யாருக்கோ பயந்துக்கிட்டு எங்கேயோ ஒடறது. எனக்குப் பிடிக்காது! இப்ப இருக்கற நெலைமையிலே எங்களுக்குத் தேனிலவு ஒண்ணுதான் கொறைச்சல். ஐயா வையும் மத்தவங்களையும் தனியே விட்டுட்டு நாங்க போக. மாட்டோம்'- என்றான் முத்துராமலிங்கம். -

தினப் பத்திரிகையில் படித்துத் தக்வல் தெரிந்தோ அல்லது கலையரசி கண்மணி போன்ற யாராவது நேரில் போய்ச்சொல்லியோ முத்துராமலிங்கத்தின் பெற்றோருக்கு. அவன் கூட்டத்தில் அடி உதைபட்டு ஆஸ்பத்திரியில் இருந்தது பற்றிய தகவல் எட்டிவிட்டது. . . . .