நா. பார்த்தசாரதி 807
திடுதிடுப்பென்று அவர்கள் சென்னைக்குப் புறப்பட்டு: வந்து விட்டார்கள். முத்துராமலிங்கம் தியாகி சிவகாமி நாதனோடுதான் தங்கியிருக்கிறான் என்றுபசுங்கிளித்தேவர் கேள்விப்பட்டிருந்ததால் அவர்களெல்லாரும் கல்யாணத் துக்காக மாங்காடு போயிருந்த தினத்தன்று அவர் சிந்தாதி, ரிப்பேட்டைக்குத் தேடிக்கொண்டு வந்திருந்தார். .
அங்கே அன்று தியாகி சிவகாமிநாதனின் வீடும் அச்சுக் கூடமும் பூட்டியிருந்தன. அக்கம்பக்கத்தாருக்கும் அவர்கள் எங்கே போயிருக்கிறார்கள் என்ற விவரம் தெரிந்திருக்க வில்லை. குடும்பத்தோடு ஏதோ ஒரு மகா நாட்டுக்கோ' பொதுக் கூட்டத்துக்கோ போயிருக்கிறார்கள் என்றுதான் அவர்கள் கூறினார்கள், அந்த அளவுக்கு மங்கா-முத்து ராமலிங்கம் திருமணத்தை மிகவும் இர க சி ய மாக வைத்திருந்தார் சிவகாமிநாதன். .
அதனால் தேடிவந்திருந்த முத்துராமலிங்கத்தின் பெற்றோருக்குக் குழப்பமாயிருந்தது. மறுநாள் வந்து மீண்டும் தேடலாம் என்று அம்பத்தூரிலிருந்த உறவினர்" ஒருவர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள் அவர்கள்.
திருமணத்துக்காக மாங்காட்டுக்கும் பூந்தமல்லிக்கும். போயிருந்த முத்துராமலிங்கம் முதலியவர்கள் பொழுது சாய்ந்த பின்பே சென்னைக்குத் திரும்பியிருந்தார்கள். பெற்றோர்கள் சென்னைக்கு வந்திருப்பதோ. தன்னைதேடி விட்டுப் போயிருப்பதோ அவனுக்குத் தெரியாமல் போயிற்று. சிவகாமிநாதனும் சண்முகம் எவ்வளவோ வற்புறுத்தியும் முத்துராமலிங்கமும் மங்காவும் வெளியூர் செல்ல மறுத்து விட்டார்கள். அவர்களி ரு வரும் உள்ளூரிலேயே எங்காவது ஒருபெரிய ஹோட்டலில்இரண்டு. மூன்று நாள் தங்கி மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வரலாம். என்று சண்முகம் அடுத்த யோசனையைக் கூறினார். அதை. யும் அவர்கள் நிராகரித்து விட்டார்கள். சிவகாமிநாதனும் சண்முகமும் முத்துராமலிங்கத்தைத் தனியே அழைத்தனர். இதம்ாக எடுத்துச் சொல்லி அறிவுரை கூறிப் பார்த்தனர்.