உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 - - நிசப்த சங்கீதம்

சிவகாமிநாதனே கூட வ ற் புறுத் திச் சொல்லிப் பார்த்தார். -

'உன்னைப்பத்திக் கவலை இல்லேப்பா! உன்னை மணந்துக்கிட்டிருக்கிற பொண்ணோட நெலைமையைக் கொஞ்சம் யோசிச்சுப்பாரு. பரம்பரையாகவே வசதியுள்ள வங்க வீட்டிலே வளர்ந்த பொண்ணு. வாழ்க்கையைப்பத்தி -என்னென்ன கற்பனைகள் பண்ணி வச்சிருந்திருச்சோ? இங்கே என்னோட இந்த வீட்டிலே தனி அறையோ, கட்டிலோ, மெத்தையோ எதுவும் கிடையாது.இருபத்தஞ்சு வருஷமா ஆசிரம வாழ்க்கை மாதிரி ஆயிரிச்சு இங்கே. நாலஞ்சு கோரைப்பாயி, கிழிஞ்ச சமுக்காளம் தவிர வேறு எதுவும் இங்கே கிடையாது. சுதந்திரம் வர்ரத்துக்கு முந்தி ஜெயில்லே கஷ்டப்பட்டேன். இப்ப வீட்டிலேயே கஷ்டப் படறேன். பிரஸ், பத்திரிகைன்னு பலதும் வீட்டிலேயே சேர்ந்து போயிட்டதாலே தனி அறைன்னுகூட எதுவும் இங்கே இல்லை. எங்கே பார்த்தாலும் காகிதம், புத்தகம் அச்சடித்த ஃபாரம்னு வீடு பூராக் குவிஞ்சு கெடக்கு."

'அறிவாளியின் வீடு புஸ்தகங்களாலேதான் நெறைஞ் சிருக்கும். முட்டாள்களோட வீடுகள் பணம், பாத்திரம், பண்டம், நாற்காலின்னு எதுனாலே வேனுமானாலும் நெறைஞ்சிருக்கும்.' - -

'நீ சொல்றதைக் கே க் கறப் பப் பெருமையா இருக்குப்பா ஆனாமத்தவங்க செளகரியத்தையும் யோசிக் கணும் இல்லியா? எதிரிகளோட அபாயங்களிலேயிருந்து உங்களைப் பாதுகாக்கனும் இல்லியா? அதனாலேதான் சண்முகம் சொல்றாப்பிலே ஒரு ரெண்டு நாள் எங்கே யாவது தனியாப் போயித் தங்கிட்டு அப்புறம் வாங்கன்னு நானும் சொல்றேன்...." - ~ : . . . . . .

அபாயங்களைப் பத்தி நான் கவலைப்படலே ஐயா! பயம் தான் சாவு. கோழையாகத் தொடர்ந்து வாழ்ந்து